வயிற்று இடுப்பு தசையைக் குறைக்கும் வக்ராசனம் (Vakrasana)

வக்ராசனம் (Vakrasana) வயிறு ,இடுப்பை சுற்றியுள்ள சதையினை குறைக்க சிறந்த ஆசனம். முதுகுத்தண்டின் அசைவுகளை இலகுவாக்குவதற்கு மிகவும் சிறந்தது. கழுத்து இறுக்கம், முதுகு பிடிப்பு ஆகியவைகள் சரியாகும். வயிறு மற்றும் இடுப்பு சதைகளின் குறைபாடுகள் நீக்கப்பெறும். அடிவயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சீராக்கி இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி சுரப்பிகளை சீராக இயங்க வைக்கின்றது.

ஒரு கிரகம் வானவெளியில் சில சமயங்களில் பின்புறமாகச் சுற்றும் (reverse). உதாரணமாக செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் எப்போதும் ஓடு பாதையில் 90 டிகிரிகளுக்குள்ளேயே தங்கள் சுழற்சியை மேற்கொள்ளும்.
தன்னுடைய சுற்றும் வேகம் அந்த விதிக்கப்பட்ட 90 டிகிரிகளை மீறும் நிலை ஏற்படுமானால், அது தன்னுடைய வேகத்தைக் குறைத்து ஏற்படப்போகும் இடைவெளியைச் சரி செய்ய பின்புறமாகச் சுழலத் தொடங்கும். பிறகு தொடரும் கிரகங்கள் அந்தச் சுழற்சி இடைவெளிக்குள் வந்த பிறகு மீண்டும் முன்புறமாகச் சுழலத் தொடங்கும். இப்படி  பின்புறமாக சுற்றுவதையே  வக்கிரம் என்பார்கள்.
இதே போன்று நமது உடலை சமன் செய்ய செய்யப்படும் ஆசனம் வக்ராசனம் எனப்படுகிறது.Vakrasana,Half spinal twist pose,வயிற்று இடுப்பு தசையைக் குறைக்கும் வக்ராசனம்,annaimadi.com,அன்னைமடி,வக்ராசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் ,Benefits of Vakrasana,வக்ராசனம் செய்யும்முறை ,How to do Vakrasana,yoga for diabetics,yoga for neckpain,to reduce the flesh around the waist,இடுப்பைச் சுற்றியுள்ள சதையைக் குறைக்க,கழுத்து இறுக்கம், முதுகு பிடிப்பு  நீங்க,

வக்ராசனம் செய்யும்முறை (How to do)

கால்களை நீட்டி, முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்துகொள்ளுங்கள்.கைகளைத் தொடைக்குப் பக்கத்தில், உடலுக்குப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும். கைவிரல்கள் முன்பக்கம் பார்த்து இருக்கவேண்டும். கைகள் லேசாக தரையைத் தொட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

தொடக்க நிலையிலிருந்து வலக்காலை மடக்கி, வலக்கால் பாதம், இடக் காலின் மூட்டுக்குப் பக்கத்தில் தரையில் பதிந்திருக்கும்படி வைக்கவேண்டும்.

வலக்கையை பின்னால் கொண்டு வந்து, வலக்கை விரல்கள் வெளிப்புறம் பார்த்து அதாவது முதுகுக்கு எதிர்ப்புறமாக இருக்கும்படி திருப்பி, முதுகுக்கு அண்டை கொடுத்தபடி வைத்துக் கொள்ளவும்.

இடக்கையை மெல்ல முன்னெடுத்து வந்து வலக்காலின் (மடக்கி வைத்திருக்கும் கால்) கட்டை விரலைப் பிடித்துக்கொள்ள வேண்டும். (வலக்காலின் இடப்பக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்) வயிற்றை உள்ளிழுத்தபடி இடுப்பு, முதுகு, தலை மூன்றையும் ஒருசேர வலப்புறமாகத் திருப்பவும்.

இப்போது நம் பார்வை வலப்புறத் தோள்மீது இருக்கும். இதுவே வக்ராசனம் (Vakrasana). இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.

Vakrasana,Half spinal twist pose,வயிற்று இடுப்பு தசையைக் குறைக்கும் வக்ராசனம்,annaimadi.com,அன்னைமடி,வக்ராசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் ,Benefits of Vakrasana,வக்ராசனம் செய்யும்முறை ,How to do Vakrasana,yoga for diabetics,yoga for neckpain,to reduce the flesh around the waist,இடுப்பைச் சுற்றியுள்ள சதையைக் குறைக்க,கழுத்து இறுக்கம், முதுகு பிடிப்பு  நீங்க,

வக்ராசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் (Benefits of Vakrasana)

வக்ராசனம் (Vakrasana) சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு மிக முக்கியமானது. இந்த ஆசனத்தைச் செய்வதால் கழுத்து வலி வராமல் பார்த்துக்கொள்ள முடியும். கண்பார்வை அதிகரிக்கும்.

மலச்சிக்கல், அஜீரணம், சிறுநீரகக் கோளாறுகள், விரிவடைந்த அல்லது சுருங்கிய கல்லீரல் மண்ணீரல் முதுகின் பின்புறம் ஏற்படும் வலி, இடுப்பு மூட்டுக்களில் வலி, உடல் பருமன், வயிற்றுப் பொருமல் முதலானவற்றிற்கு நல்லது. இடுப்பைச் சுற்றியுள்ள சதையினைக் குறைக்கிறது.சோம்பலை அகற்றிச் சுறுசுறுப்பைத்தருகிறது.

கல்லீரலைப் பலமாக்கும்.
தொப்பையைக் கரைக்கும்.7. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்தும்.செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும்.வயிறு தொடர்பான புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படும்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *