வாழைப்பூவில் பகோடா (Valaipoo pakoda)
வாழைப்பூ வறை,பொரியல், குழம்பு என்றால் குழந்தைகள் ஏன் சில பெரியவர்கள் கூட விரும்பிச்சாப்பிடமாட்டார்கள்.அதனால் வாழைப்பூ வடை, வாழைப்பூ பகோடா (Valaipoo pakoda) போன்ற வடிவில் செய்தால் எல்லோருமே நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆறுசுவைகளும் உள்ள உணவகளை நாம் உண்ணவேண்டும். துவர்ப்பு சுவையை நாம் அதிகம் உணவில் எடுத்துக்கொள்வதில்லை. நெல்லிக்காய், அத்திக்காய், வாழைத்தண்டு,வாழைப்பூ போன்ற ஒரு சில உணவுகளிலேயே அதிகம் துவர்ப்பு சுவை நிறைந்து உள்ளது.
வாழைப்பூ பகோடா (Valaipoo pakoda)செய்வது என பார்ப்போம்.
குழந்தையின்மைக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.
சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
இரத்த மூலம் உள்ளவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.
உடல் அசதி, வயிற்று வலி, மாதவிடாய் வலி என்பனவும் குறையும்.