வளமான வாழ்வு தரும் வலம்புரிசங்கு (Valampuri conch)

குப்பைமேட்டில் இருப்பவனையும் கோடீஸ்வரனாக்கிடும் அற்புத சக்தி வலம்புரி சங்கிற்கு (Valampuri conch) உண்டு.

பழங்காலத்தில் மக்கள், செல்வ செழிப்போடு இருக்க வீடுகளின் தலை வாசலில் சங்கு பதித்து வைப்பது வழக்கம். அதாவது, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை (Valampuri conch), வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசல் படியில் பதித்து விடுவார்கள்.

அதன் மூலம் குறைகள் இல்லாத வாழ்க்கை அமைவதாக ஒரு நம்பிக்கை.

பொதுவாக வீடுகளில் அமைந்திருக்கும் வாஸ்து குறைகளை நீக்குவதற்கு, மஞ்சள் கலந்த நீரில் துளசியை இட்டு சங்கு தீர்த்தமாக காலை நேரங்களில் தெளித்து விட்டால் அந்த குறைகள் நீங்குவதாக ஐதீகம்.

ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் சங்கின் மூலம் வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும்.

அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச்சங்கு என்பார்கள்.

தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது.

சங்கில்  பல வகை இருந்தாலும் ,வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

Valampuri sangu,annaiamdi.com,அன்னைமடி,வலம்புரிசங்கின்மகிமை,வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு,Valampuri conch ,Valampuri conch that brings prosperity,வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு 

ஆன்மீகத்தில் மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் சங்கின் பங்கு (Valampuri conch& health benefits)

சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? சங்கின் குணம் நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்து  வைத்தார்கள்.

இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர்.

அதனால் தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாக கருதப்பட்டது. குழந்தைகளுக்கு அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றி தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது.

சங்கநாதம் கேட்கும் இடங்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது.

வற்றாத செல்வம் பெற சங்கை பூஜிக்கும் முறைகள் (Ways of worshiping Valampuri conch)

சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.

மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள்.

வலம்புரிசங்கில் (Valampuri conch) நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

பெரும்பாலான கோவில்களில் மணி அடிப்பது மற்றும் சங்கு ஊதுவது போன்ற நடைமுறைகள் இருப்பதை கவனித்திருப்போம்.

வேதங்களின் உட்பொருளான ஓம்கார மந்திரத்தை நினைவுபடுத்துவதாலும், பொருள் வளத்தை தருவதாலும் கடவுளுக்கு முன்பு வைத்து வணங்கப்படும் தன்மையை சங்கு பெற்றிருக்கிறது.

Valampuri konkylie, der bringer velstand,annaiamdi.com,அன்னைமடி,வலம்புரிசங்கின்மகிமை,வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு,Valampuri conch ,Valampuri conch that brings prosperity,வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு  ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு(Valampuri conch) இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது.

வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும்.

சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது.

வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.

அதிலும் கோடி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம்.

Valampuri konkylie, der bringer velstand,annaiamdi.com,Valam Purichangu,அன்னைமடி,வலம்புரிசங்கின்மகிமை,வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு,Valampuri conch ,Valampuri conch that brings prosperity,வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு 

வலம் புரிச்சங்கு பூஜை பலன்கள் (Valampuri conch Puja benefits)

பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சங்கை மஞ்சள் பட்டு அல்லது காட்டன் துணியில் அல்லது ஒரு சிறிய பித்தளை,வெள்ளி, செம்பு தட்டு அல்லது கிண்ணத்தில் சுத்தமான நீர் ஊற்றி அதில் சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு அதில் வைக்க நல்ல பலன்களைத் தரும்.

அந்த நீரைத் தினமும் மாற்ற வேண்டும். முந்தைய நாளில் பயன்படுத்திய நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வறுமை நீங்கும்.

தொழில் செய்யும் இடங்களில் தெளித்து வரத் தொழில் விருத்தி உண்டாகும்.

வியாபாரிகள், தொழில் அதிபர்கள் அந்த நீரால் முகம் கழுவி வெளியில் செல்ல சகல காரியங்களில் வெற்றியும் வசீகர சக்தியும் உண்டாகும்.
யாவரும் தினமும் அந்த நீரால் முகம் கழுவி வர அவர்களை ஒருபோதும் வறுமை வாட்டாது.

ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.

வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *