காதலர் தினத்தின் பின் மறைந்துள்ள காதல் கதை (Valentines day)

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் (Valentines day) தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின (Valentines day) கொண்டாட்டம் தொடங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிப்ரவரி 14ஆம் தேதி வாலண்டைன்ஸ் டே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம் . தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

நாம் தினந்தேறும் நம் காதலி அல்லது காதலனிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாளன்று வெளிப்படுத்துவது ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்க முடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது. 

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.  இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும்.

காதலர் தினத்தின் பின் மறைந்துள்ள காதல் கதை ,Valentine's day,அன்னைமடி,காதலர் தினம்,வலண்டைனின் காதல் கதை ,annaimadi.com,Valentine's love story,lovers day,February 14 th day,Love story behind the lovers day

காதலர் தினத்தின் பின் மறைந்துள்ள கதை(The story behind Valentines Day

♥திரு­ம­ண­மா­ன­வர்கள் மனை­வியை பிரிந்து வரத் தயங்­கு­கி­றார்கள். காதலிக்கும் இளை­ஞர்கள் காதலியை பிரிந்து வர தயங்­கு­கின்­றனர்.
இவை இரண்டும் இல்­லா­விட்டால் படையில் சேர்­வார்கள் என்று கி.பி.207 ஆம் ஆண்டில் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளா­டியஸ் மன்னன் எண்ணினான்.
♥இதனால், கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார்.
மன்­னனின் அறி­விப்பைக் கேட்ட ரோமா­னி­யர்கள் அதிர்ச்­சி­யடைந்­தனர்.
♥இதை மீறு­ப­வர்கள் கைது செய்­யப்­பட்டு இருட்டுச் சிறையில் அடைக்­கப்­ப­டு­வார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்­டித்து கொல்­லப்­ப­டு­வார்கள்’’ என உத்­த­ர­வி­டு­மாறு தனது அமைச்­சருக்கு அறி­வித்தான்.
♥இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி காதல் ஜோடி­க­ளுக்கு,இரகசியமாக  திருமணங்களை நடத்தி வைத்தார்.

♥இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.

♥இடைப்­பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதி­ரியார் வலன்டைன், அச்­சி­றையின் தலைமைக் காவலர் அஸ்டோ­ரி­யஸின் பார்வை இழந்த மகள் ஜூலி­யாவை குணப்­ப­டுத்­தினார்.
வாலண்டைனுக்கும் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
 
♥இதை அறிந்த மன்னன் சிறைகாவல்  தலைவனை வீட்டுச் சிறையில் வைத்தான். அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது  காதலை ,முதல்வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார்.இதை­யெல்லாம் கேள்­விப்­பட்ட மன்­னன் கிளா­டியஸ் கோபம் கொண்டு பாதிரியார் வலன்­டைனின் தலையைச் சீவும்­படி ஆணை­யிட்டான்.
வலன்­டைனை விடு­விக்க அஸ்­டோ­ரியஸின் மகள் முயன்றாள்.

இதே நேரத்தில் தான் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு  கொல்லப்பட்டார்.

♥கி.பி.207 பெப்­ர­வரி 14 ஆம் திகதி தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. அவர் நினை­வாகக் கொண்­டா­டப்­ப­டு­வ­து தான் ‘வலன்டைன்ஸ் டே (Valentines Day) எனும் காதலர் தினம்.

 காதலர் தினத்தின் பின் மறைந்துள்ள காதல் கதை ,Valentine's day,அன்னைமடி,காதலர் தினம்,வலண்டைனின் காதல் கதை ,annaimadi.com,Valentine's love story,lovers day,February 14 th day,Love story behind the lovers day

காதலர் தின பரிசு (Valentines day gift)

காதலிப்பவர்களுக்கு காதல் எப்பொழுதுமே ஒரு மென்மையான விஷயம். அதனால் தான் காதலை பூக்களுடன் ஒப்பிடுகிறார்கள். அதிலும் ரெட் கலர் ரோஜாப் பூக்கள் எல்லாருக்கும் பிடித்தமான பரிசு.

எனவே இந்த தினத்தன்று உங்க காதலர் மற்றும் காதலிக்கு ரோஜாப் பூக்களை பரிசாக கொடுக்கலாம். 

காதலர் தினத்தின்  இரண்டாம் நாளான இன்று மிகவும் முக்கியமானது. காரணம் உங்க அன்பானவரை நேருக்கு நேர் பார்த்து உங்கள் காதலை சொல்ல போகிறீர்கள்.

இந்த நாளில் உங்க துணைக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யுங்கள். விருப்பமான பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுங்கள். புரப்போஸ் (Propose ) செய்யும் போது கண்கள் மிகவும் முக்கியம்.

உங்க இருவர் கண்ணும் இணையட்டும். பயப்படாமல் அவருடைய கண்களை பார்த்து உங்க மனதில் இருக்கும் அன்பை வெளிப்படுத்துங்கள்.

காதலர் தினத்தின் பின் மறைந்துள்ள காதல் கதை ,Valentines day,அன்னைமடி,காதலர் தினம்,வலண்டைனின் காதல் கதை ,annaimadi.com,Valentine's love story,lovers day,February 14 th day,Love story behind the lovers day

சாக்லெட்டில் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது.

அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது.

அதனால் தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்த டெட்டி பியர்கள் கள்ளம் கபட மற்றது மென்மையானது மற்றும் உறவை மேம்படுத்த ஒரு சிறந்த கிப்டாக இதை பிறருக்கு நீங்கள் வழங்கலாம்.

இந்த டெட்டி பியர்கள்(Teddy bears), உங்கள் காதலை எப்போதும் நினைவூட்டுவதால், பல ஆண்டுகளுக்கு இதை நீங்கள் உங்களுடனே வைத்திருக்க முடியும்.

இவை உங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு அருமையான பொருளாகும்.

காதலர்கள் தினத்தில் நீங்கள் கட்டி அணைக்கும் போது , அன்பு, மகிழ்ச்சி, காதல் வெளிப்படுகிறது.

அணைக்கும் போது சுரக்கும்‘ஆக்ஸிடோசின்’ ஹார்மோன் தனிமை, விரக்தி, கோபம் உள்ளிட்ட பலவற்றிற்கு அருமருந்தாகும். 

உங்கள் அன்புக்குரியோருக்கு நீங்கள் கொடுக்கும் அணைப்பு, நீங்கள் அவர் மேல் எவ்வளவு பிரியத்துடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துவதற்கு மிகச்சிறந்த வழி. 

காதலர் தினத்தின் பின் மறைந்துள்ள காதல் கதை ,Valentines day,அன்னைமடி,காதலர் தினம்,வலண்டைனின் காதல் கதை ,annaimadi.com,Valentine's love story,lovers day,February 14 th day,Love story behind the lovers day

 உங்கள் துணைக்கு சிறிய அன்பு பரிசு கொடுத்து, அக்கறையுடன் காதலுடன் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்!

அவசியம் திருமணமானவர்கள் இதை கடைப்பிடிப்பது திருமண பந்தத்திற்கு நல்ல உறுதுணையாகும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *