வல்லாரை ,மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. எனவே தான், இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.
இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமை (Vallarai keerai benefits) கொண்டது இந்த கீரை.
வல்லாரை கீரையில் இரும்புசத்து, சுண்ணாம்புசத்து, தாதுஉப்புக்கள் , விற்றமின் ஏ,சி அதிகம் உள்ளது. மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மூளைவளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உதவுகிறது.
வெரிகோஸ் வெயின் (varicose veins) என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணி. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது.
வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிட்டு வர,நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும். உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் (Vallarai keerai benefits) வல்லாரைக்கு உண்டு.
முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் வலுவடையும்.
உடல் அதிக வெப்பமடைவதால் கட்டிகள் ஏற்பட்டு புண்கள் மற்றும் கட்டிகள் ஏற்படுகின்றன.மற்ற சிலருக்கு அடிபடுவதாலும் ரத்த காயங்கள் ஏற்பட்டு புண்கள் உண்டாகி மிகுந்த வலியை ஏற்படுத்துகின்றன.
வல்லாரை கீரையின் இலைகளை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி புண்கள், கட்டிகள் மேலே பற்றிடுவதால் அவை சீக்கிரம் ஆறும்.
மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு.
வல்லாரை கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும்.
வல்லாரை கீரையை எடுத்துக் கொண்டு அதை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
வல்லாரைகீரை இலைகளை பற்களின் மீது தேய்ப்பதால், (காய வைத்து தயாரித்த வல்லாரை பொடியை கூட பயன்படுத்தி கொள்ளலாம்) பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி, பற்கள் அழகாக மின்னும். பல் ஈறுகள் வலுவடையும். வாய்புண் ,வாய்நாற்றம் நீங்க, வல்லாரைகீரை இலைகளை காலைவேளையில் மென்று தின்று வரலாம்.
படை போன்ற சருமநோய்கள் குணமாகும். முடி, தோல் நகம் நல்ல பொலிவினை பெறும். இளமைத் திரும்பும்.
இவ்வாறு சாப்பிடும் காலங்களில் மாமிசத்தை தவிர்த்துவிடுதல் நல்லது.
இரத்தசோகை நோயை குணப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.
ஆஸ்துமா, சளி இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோர் வல்லாரை இலைகளை தேனீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.
பார்வைதிறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் போக்கி, கண் நரம்புகளை பலமடைச்செய்து பார்வை கோளாறுகளை சரி செய்கிறது.
காய்ச்சல் இருமல், சளி குணமடைகிறது. வல்லாரை இலையுடன் துளசி இலைகள், மிளகு சம அளவு எடுத்து, விழுதாக அரைத்து மாத்திரைகளாக சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குணமாகிவிடுவம்.
அதோடு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். உடற்சோர்வு ,தொண்டைக்கட்டு இதனையும் சரிசெய்கிறது.
மலச்சிக்கலை போக்கி, வயிற்றுப்புண், குடல் புண்ணை ஆற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. வல்லாரை கீரைபயன்படுத்தி எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இதனால் உடல் சோர்வு, மனச்சோர்வு உடம்பு எரிச்சல், உடல் சூடு குறையும்.
சிறியவர்களுக்கு 10-வல்லாரை இலைகளை பச்சையாகவே சாப்பிட கொடுக்கலாம். மூளை நரம்புகள் பலம்பெறும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். காசநோய் உள்ளவர்களுக்கும் சிறந்த பலனை தருகிறது.
வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து, இரவில் தூங்கப்போகும் முன், பாலில் கலந்து குடித்துவந்தால் வயிற்று பூச்சிகள் அழிந்துவிடும்.
வல்லாரை இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி வீக்கம், கட்டிகள் மேல் கட்டி வர, விரைவில் குணமடையலாம்.
வல்லலாரை சம்பல் செய்யும் முறை (Vallarai recipe)
வல்லாரை கீரையைக் கழுவி மிக சிறிதாக அரிந்து கொள்ளவும். அதனுடன் பொடியாக வெட்டிய வெங்காயத்தை சேர்த்து தேங்ங்காய்ப்பூ அல்லது பால் சிறிது கலந்து உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலக்கவும்.
உடனடியாக வல்லாரை சம்பல் தயராகி விடும். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.