வல்லாரை துவையல் (Vallarai sampal)
ஒரு சிறந்த சித்த மருத்துவ மூலிகையான வல்லாரையில் துவையல் (Vallarai sampal) செய்து உணவில் சேர்ப்போம். வல்லாரைக்கீரை மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை அதிகம் கொண்டிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.
வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, கல்சியம் , உயிர்ச்சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களையும் ,அதிக அளவில் கொண்டுள்ளது.
வல்லாரையில் எப்படி துவையல் (Vallarai sampal) செய்வது என்று வீடியோவில் பாருங்கள்.
வல்லாரை கீரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது இக்கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் ஞாபக சக்தி ஆகும்.
குறிப்பாக வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு வாரமொருமுறை வல்லாரை கீரையை துவையல் அல்லது வல்லாரைச் சம்பல் செய்து சாப்பிட கொடுங்கள்.
வல்லாரைகீரையை பச்சையாக சிறிது சிரிதாக அறிந்து ,வெங்காயம், மிளகுதூள்,உப்பு சேர்த்து சம்பல் செய்தும் சாப்பிடலாம்.
இதனால், அவர்களின் மூளை செல்களின் வளர்ச்சி தூண்டப்பெற்று , ஞாபகசக்தி மற்றும் சிந்தனை திறன் அதிகம் வளரும்.அவர்களது கல்வி செயற்பாடுகளில் அதிக முன்னேற்றம் ஏற்படும்.
வல்லாரைக் கீரையின் நற்பயன்கள்
வயதானவர்களை அதிகமாக தாக்கும் ஞாபகமறதி நோய் (dementia) வல்லாரையை அடிக்கடி சாப்பிடுவதால் இல்லாமல் போகும்.
வல்லாரை, கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சனை அதாவது வெரிகோஸ் வெயின் (varicose veins) இற்கு ஒரு மிக சிறந்த நிவாரணி. இது மட்டுமல்லாது ,வல்லாரை விழுதை தொடர்ந்து சாப்பிட்டு வரநரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும். Check Price