பலவிதமான சுவையான கட்லட் செய்முறை (Variety of delicious cutlet recipe)

எப்போதும் ஒரே விதமாக செய்யாமல் உள்ளீட்டை பல விதமாக மாற்றி செய்து பல வித சுவையான கட்லட்களை (Variety of delicious cutlet recipe) சாப்பிடுவோம்.

கட்லட் என்று சொல்லும் போது உருளைக்கிழங்கு கட்லட், மீன்  கட்லட்டை எப்போதும்  நினைவிற்கு வரும். சாப்பிடத் தோன்றும். கட்லட் மிக மென்மையாக இருப்பதால் பல்லில்லாத முதியவர்கள் கூட ரசித்து உண்ணமுடியும். சுடச்சுட ஆவிபறக்க சாப்பிடும் போது ,அதன் சுவையே தனி.

அதைவிட வடை, பற்றீஸ் , ரோல்ஸ் போன்றவற்றை விட மிக எளிதாக செய்யக் கூடியதாக இருப்பதும் இதன் தனித்தன்மை.

தட்டை, உருண்டை, நீள் உருண்டை வடிவில் செய்வார்கள். மாலைநேர தேநீருக்கு சிற்றுண்டியாகவும், மதிய ,இரவு உணவின் போதும், ஸ்டார்ட்டர்  ஆகவும் பயன்படுத்தக் கூடிய சுவையான சிற்றுண்டி.

பல மரக்கறிகளைச் சேர்த்து செய்யும் வெஜிடபிள் கட்லட் செய்யும் முறையை வீடியோவில் பார்க்கலாம்.

பலவிதமான கட்லட் செய்முறைகள்  (Variety of delicious cutlet recipe)

சீஸ் கட்லட் (Cheese cutlet)

தேவையான பொருட்கள்

 • துருவிய  சீஸ்
 • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
 • வேகவைத்த கரட்
 • நறுக்கிய வெங்காயம் – 1
 • மிளகாய்த்தூள் – 1 தே.க அல்லது சுவைக்கேற்ப 
 • கடுகு, பெரிய சீரகம் – தலா ½ தே.க
 • வெட்டிய கறிவேப்பிலை – சிறிதளவு
 • கரம் மசாலா தூள் – ½ தே.க
 • முட்டை வெண்கரு – 2
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்
 • உப்பு – சிறிதளவு
 • எண்ணெய் –பொரிக்க
 • விரும்பினால் கொத்தமல்லி இலை சேர்க்கலாம்.

செய்முறை

 • சட்டி ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெரிய சீரகம் சேர்த்து அதில் , வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • கரட் துண்டுகள் , மசித்த உருளைக்கிழங்கை போட்டு ,உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும் அந்த கலவையை சேர்த்து கிளறி விடவும்.
 • கலவையை உருண்டையாக்கி ,அதன் நடுவில் ஒரு துளை போட்டு 1 தே.க அளவு சீஸ் வைத்து உருட்டி வைக்கவும்.
 • உருண்டையை முட்டை வெள்ளைக்கருவில் நனைத்து , பிஸ்கட் தூளில் பிரட்டி பொன்னிறமாக  பொரித்தெடுக்கவும்.
 • முட்டைகட்லட் தயார்.

இறால் கட்லட் (Prawn cutlet)

தேவையான பொருட்கள்

 • இறால் – 200 கிராம்
 • வேகவைத்த உருளைக்கிழங்கு
 • நறுக்கிய வெங்காயம் – 1
 • மிளகாய்த்தூள் – 1 தே.க அல்லது சுவைக்கேற்ப
 • கடுகு, பெரிய சீரகம் – தலா ½ தே.க
 • வெட்டிய கறிவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு – சிறிதளவு
 • எண்ணெய் – சிறிதளவு
 • கரம் மசாலா தூள் – ½ தே.க
 • முட்டை வெண்கரு – 2
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்

செய்முறை

 • இறாலை தோல் நீக்கி கழுவி உப்பு சேர்த்து அவிக்கவும்.
 • அவித்த இறாலை சிறிய துண்டுகளாக்கவும். சிறிய இறால் என்றால் அப்படியே போடலாம்.
 • சட்டி ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெரிய சீரகம் சேர்த்து அதில் , வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும் அதில் இறால் , மசித்த உருளைக்கிழங்கை போட்டு ,உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
 • உருண்டையை முட்டை வெள்ளைக்கருவில் நனைத்து , பிஸ்கட் தூளில் பிரட்டி பொன்னிறமாக  பொரித்தெடுக்கவும்.

Variety of delicious cutlet recipe,indian receipe,annaimadi.com,,veg cutlet ,spicy snack receipe,,easy snack receipr,starrter receipe

முட்டை கட்லட் (Egg cutlet)

தேவையான பொருட்கள்

 • வேகவைத்த முட்டைகள் – 5
 • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
 • நறுக்கிய வெங்காயம் – 1
 • மிளகாய்த்தூள் – 1 தே.க அல்லது சுவைக்கேற்ப 
 • கடுகு, பெரிய சீரகம் – தலா ½ தே.க
 • வெட்டிய கறிவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு – சிறிதளவு
 • எண்ணெய் – சிறிதளவு
 • கரம் மசாலா தூள் – ½ தே.க
 • முட்டை வெண்கரு – 2
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்

செய்முறை

 • உருளைக்கிழங்கு தோல் உரித்து மசித்து வைக்கவும்.அதில் உப்பு, மிளகுத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 • முட்டைகளை அவித்து , குறுக்காக 2 பாதியாக வெட்டி வைக்கவும்.
 • சட்டி ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெரிய சீரகம் சேர்த்து அதில் , வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும் அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு ,உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
 • வெட்டிய முட்டையை  நடுவில் வைத்து  கிழங்குக்கலவையால் மூடி உருட்டி பிடிக்கவும்.
 • உருண்டையை முட்டை வெள்ளைக்கருவில் நனைத்து , பிஸ்கட் தூளில் பிரட்டி பொன்னிறமாக  பொரித்தெடுக்கவும்.
 • சிறிய முட்டைகளாக எடுப்பது நல்லது.

உருளைக்கிழங்கு கட்லட் (potato cutlet)

தேவையான பொருட்கள்

 • வேகவைத்த உருளைக்கிழங்கு – 200 கிராம்
 • நறுக்கிய சின்ன வெங்காயம் – 5,6
 • மிளகாய்த்தூள் – 1 தே.க அல்லது சுவைக்கேற்ப 
 • கடுகு, பெரிய சீரகம் – தலா ½ தே.க
 • வெட்டிய கறிவேப்பிலை – சிறிதளவு
 • கரம் மசாலா தூள் – ½ தே.க
 • முட்டை வெண்கரு – 2
 • பிஸ்கட் தூள் – 100 கிராம்
 • உப்பு – சிறிதளவு
 • எண்ணெய் – சிறிதளவு

செய்முறை

 • உருளைக்கிழங்கு தோல் உரித்து மசித்து வைக்கவும்.
 • சட்டி ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெரிய சீரகம் சேர்த்து அதில் , வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • வெங்காயம் வதங்கியதும் அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு ,உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
 • கிழங்குக்கலவையை  உருட்டி தட்டையாகவோ அல்லது உருண்டையாகவோ உருட்டி வைக்கவும்.
 • உருண்டையை முட்டை வெள்ளைக்கருவில் நனைத்து , பிஸ்கட் தூளில் பிரட்டி பொன்னிறமாக  பொரித்தெடுக்கவும்.

சைவ உணவு உண்பவர்கள் முட்டை வெண்கருவிற்கு பதிலாக கோதுமைமா கரைத்து அதில் தோய்த்து பொரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.