மொறு மொறுப்பான வாழைப்பூ வடை (Vazhaipoo Vadai)
வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கின்றது.ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான், வாழைப்பூ வடை (Vazhaipoo Vadai) வாழைப்பூ பொரியல், வாழைப்பூ பகோடா, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம்.
வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். குறிப்பாக, வாழைப்பூ அதிக பயன்தரக்கூடியது.
வாழையின் தண்டு, காய், பழம், பூ, இலை, நார், பட்டை என எல்லாவற்றையும் நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் வழையின் பல மருத்துவகுணங்களே.
அதேபோல், இப்போது உள்ள உணவு பழக்கங்களால் பலரையும் பாதித்திருக்கும் பிரச்சனை அஜீரணக் கோளாறு. இதனால் வயிற்றுக்கடுப்பு, சீதக்கழிச்சல் ஏற்படுகிறது.
இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து, அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
ஆரோக்கியமான ,சுவையான வாழைப்பூவடை (Vazhaipoo Vadai) செய்யும் முறையை பார்ப்போம்.
வாழைப்பூவை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்கும். இதனால் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.
ரத்த சோகை குறைபாடு குழந்தைகள், பருவ வயதினர் போன்றோரிடத்தில் அதிகம் இருக்கிறது.
வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.
வாழைப்பூ துவர்ப்புத்தன்மை அதிகம் கொண்டது.இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்கும் செயலை,துவர்ப்புதன்மை புரிகின்றது.
அதிகமானோரை வாட்டும் நோய்களுள் சர்க்கரை நோய் முக்கியமான ஒன்று. இந்த நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும்.இதனால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சில மாதங்கள் வரை வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை இருக்கும். இவை அனைத்தையும் நீக்க, வாழைப்பூவில் செய்யப்படும் உணவுகள் பெரிதும் உதவுகின்றது.
வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர அடிக்கடி வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
அதுமட்டுமல்லாது ,வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும்.
வாழைப்பூ அதிக நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால்,மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும், ஒரு சிறந்த இயற்கை உணவாக வாழைப்பூ இருக்கிறது.

அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும்.
பெரும்பாலும் காலை உணவுகளை தவிர்ப்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும்
ஏ ற்படும் இந்த அல்சர் வாரத்திற்கு ஒருமுறை வாழைப்பூ உணவை சாப்பிட்டு வந்தால் , விரைவில் குணமாகும்.
பலருக்கு ஊட்டச்சத்தின்மையால் ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுகின்றன. அதோடு கூடவே,வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இது போன்ற கிருமிகளையும் வாழைப்பூ அழிக்கும் சக்தி பெற்றது.