வரலாற்று சிறப்பு மிக்க வீராணம் ஏரி -பொன்னியின் செல்வன் (Veeranam Eri)
ஆடிப் பெருக்குத் திருநாள்… கடல்போல் பரந்து விரிந்திருந்த வீராணம் ஏரி(Veeranam Eri).ஆடி பதினெட்டாம் நாள் அதாவது ஆடிப் பெருக்கு அன்று சோழநாட்டில் உள்ள நதிகளிலெல்லாம் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு ஓடிக் கொண்டு இருப்பது வழக்கம்.
வீரநாராயணன் ஏரி(Veeranam Eri) எனும் பெயரே தற்போது வீராணம் என்று சுருங்கிப் போய்விட்டது. விஜயாலயனின் பேரனான பராந்தகச் சோழனின் பட்டப்பெயரே வீர நாராயணன்.
இவன் காலத்தில் வடக்கே இரட்டபாடி ஏழரை இலக்க நாட்டினர் (ராஷ்டிரகூடர்கள் ) வலிமை பெறத்தொடங்கினார்கள். அவர்கள் தெற்குநோக்கிப் படையெடுக்கலாம் என்று எதிர்பார்த்த பராந்தகன் தன் மகன் ராஜாதித்தன் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தான்.
பெரும்போரை எதிர்நோக்கி வீரர்கள் காத்திருந்த நேரத்தில், அவர்களால் வெட்டப்பட்டது தான் வீராணம் ஏரி(Veeranam Eri).
காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இந்த ஏரிக்கு நீர்கொண்டு வரப்படுகிறது. முறையாகத் திட்டமிடலுடன் பிரமாண்டமாக வெட்டப்பட்ட ஏரி, வீராணம்.
பராந்தகன் காலத்தில் வீராணம் ஏரிக்கரையில் சதுர்வேதிமங்கலம் அமைக்கப்பட்டு பெருமாள் கோயில் ஒன்றும் எழுப்பப்பட்டது.
இந்த சதுர்வேதி மங்கலத்துக்குப் பெயர் ‘வீரநாராயண சதுர்வேதி மங்கலம்’ என்பதாகும். கோயில் பெயர், வீரநாராயண விண்ணகரம். கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் வீரநாராயண எம்பெருமான் என்று குறிப்பிடப்படுகிறார்.
பிற்காலத்தில், சடையவர்ம சுந்தர பாண்டியனால் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு நிவந்தமும் வழங்கப்பட்டது.
வீராணம் ஏரி வழியில் வந்தியத்தேவன் வரலாற்றுப் பயணம்(Veeranam Eri)
அதன் கரையில் வந்தியத்தேவனோடு பொன்னியின் செல்வன் தொடங்க, அந்தக் கணத்திலிருந்து நாமும் சோழர்காலத்துக்குள் அவனோடு பயணிக்கத் தொடங்கிவிடுவோம்.
தமிழ் இலக்கிய உலகின் எவர்கிரீன் நாவல் – பொன்னியின் செல்வன். அமரர் கல்கி தொடர் கதையாக எழுதிய காலத்திலிருந்து இன்று வரையிலும் வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுத் திகழ்கிறது, பொன்னியின் செல்வன்.
ஆதியும் அந்தமும் இல்லாத காலவெள்ளத்தில் கற்பனைக் குதிரையின் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கள் காலகட்டத்துக்கு வாசகர்களைத் தன் எழுத்துகள் மூலம் அழைத்துச் சென்று பிரமிப்பை ஏற்படுத்தியிருப்பார், கல்கி.
அந்த நாவலில் தோன்றும் வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன், ஆதித்தகரிகாலன், பூங்கோதை, நம்பி, மணிமேகலை, நந்தினி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் மனதில் நீங்காத இடம் பிடித்தது.
ஆடிப் பெருக்குத் திருநாளில், கடல்போல் பரந்து விரிந்திருந்த வீராணம் ஏரிக்கரையில் (Veeranam Eri)வந்தியத் தேவனோடு தொடங்கும் பொன்னியின் செல்வன் நாவல்.
பொன்னியின் செல்வன் நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் வந்தியத்தேவன் கால்பதித்த இடத்தில் நாமும் கால்வைக்க வேண்டும்.
வந்தியத்தேவன் சாகசம் மேற்கொண்ட இடங்களை நாமும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுவதை தவிர்க்க முடியாதது உண்மையே.
“ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எவ்வளவு அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா?
வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே?
அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்திருக்க வேண்டும்? மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று…”
கடல்போல பரந்து விரிந்திருந்த வீராணம் ஏரிக்கரையைப் பார்த்தபோது வந்தியத்தேவனின் எண்ணத்தில் உதிர்த்தவை இவை.
வந்தியத்தேவன் மட்டுமல்ல, இன்றும் நாம் வீராணம் ஏரியைப் பார்க்கும்போது இதே போன்றதொரு பிரமிப்பைப்பைத்தான் நாமும் அடைவோம்.
புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பி ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயணன் ஏரியை பார்க்கும் எவரும் நம் பலம் தமிழ் நாட்டு மூதாதையர் தம் காலத்தில் ஆதித்த அரும் பெரும் சாதனைகளை எண்ணி எண்ணி பெருமிதமும் பெருரு வியப்பும் கொள்ளாமல் இருக்க முடியாது.
நம் முன்னோர் தம் காலத்து மக்களின் நலனிற்கு மட்டுமா காரியங்களை சாதித்தார்கள்.
தமிழ் நாட்டில் வாழையடி வாழையாக தம் பின்னால் வரும் ஆயிரம் சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி உள்ளார்கள்.
காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இந்த ஏரிக்கு நீர்கொண்டு வரப்படுகிறது. முறையாகத் திட்டமிடலுடன் பிரமாண்டமாக வெட்டப்பட்ட ஏரி, வீராணம்.