வெஜிடபிள் சாலட் (Vegetable salad for weight loss)
சாலட் செய்ய பயன்படுத்தும் காய்கறிகளில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், கரட், காலிஃபிளவர், செலரி, வெள்ளரிக்காய்,சோள முத்துக்கள், பேபி கார்ன்,வெங்காயம், கீரை, காளான்கள், பட்டாணி, பெல் பெப்பர்ஸ், மிளகாய், முள்ளங்கி, ரோமெய்ன், கீரை மற்றும் தக்காளி ஆகியவை மிகவும் பிரபலமானவை.

இவை தவிர சாலட்டிற்கு சுவை சேர்ப்பதற்காக நிலக்கடலை போன்ற நட்ஸ்கள்,உலர்ந்த பழங்கள்,முழு தானியங்கள்,பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்,புதிய பழம் வேகவைத்த டொர்டில்லா அல்லது பிடா சிப்ஸ்,பாலாடைக்கட்டிகள் போன்றவையும் ஆரோக்கியமான சேர்க்கைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கலோரிகள் குறைந்த பச்சை சாலட்டை, உங்கள் உணவின்
ஒரு முக்கிய பகுதியாக இணைத்துக் கொள்ளலாம்.

உணவு சத்து,சுவை,மணம் மட்டுமன்றி பார்ப்பவரை சாப்பிடத் தூண்டும் அளவிற்கு அழகாகவும் இருப்பது
அவசியம்.சாலட் செய்யும் போது,மரக்கறிகளை மிக மெல்லியதாக,பல வடிவங்களில் வெட்ட,
எலெக்ட்ரிக் உபகரணம் (Vegetable Chopper) இங்கே கிடைக்கின்றது.
இது உங்கள் வேலையை இலகுவாக்கும்.நேரத்தை மிச்சப்படுத்தும்.
உங்கள் விருப்பம்,கற்பனைக்கு ஏற்ப பலவிதமான காய்கறிகளை சேர்த்து விதம் விதமாக சலாட் செய்யலாம். இடைநேர பசிக்கு ஏற்ற சிறிய உணவு.மிக எளிதாக எல்லோராலும் செய்யக்கூடியது.
வெள்ளரிக்காய் சலாட்
தேவையான பொருட்கள்
1 சிறிய வெள்ளரிக்காய்
1 கப் கெட்டியான தயிர்
1/2 தேகரண்டி செத்தல் மிளகாய் தூள்
1/2 தேகரண்டி வறுத்த சின்னச் சீரகப் பவுடர்
தேவையான அளவு உப்பு தூள்
சிறிதளவு புதினா இலை அல்லது கொத்தமல்லி இலை
செய்முறை
வெள்ளரிக்காயைக் கழுவி தோலுடன் சிறிய துருவலாக (vegetable slicer ) துருவி எடுக்கவும்.
கழுவிய புதினா இலையை சிறிதாக வெட்டி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கெட்டியான தயிர், துருவிய வெள்ளரிக்காய், வெட்டிய புதினா இலை, 1/2 தேக செத்தல்தூள், 1/2 தேக வறுத்த சின்னச் சீரகத்தூள், தேவையான அளவு உப்பு என்பவற்றைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
சுவையான வெள்ளரிக்காய் சலாட் தயார்.
இதை பிரியாணி, புலாவ் போன்றவற்றுடன் மதிய உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.
அசைவ உணவு விரும்புபவர்கள்,அவித்த இறால், எலும்பில்லாத கோழித்துண்டுகள், முள்ளு நீக்கிய மீன் துண்டுகள் போன்றவற்றை மரக்கறிகளுடன் சேர்த்து சலாட் செய்து உண்ணலாம்.