குழந்தைகளுக்கும் பிடிக்கும் முறையில் வெண்டைக்காய் பொரியல் (Vendaikkai poriyal)

அன்றாட உணவில் காய்கள் அதிகம் சேர்க்க வேண்டிய காய்களில் வெண்டைக்காய் மிகவும் மிகவும் முக்கியமானது. வெண்டைக்காய் பொரியல் (Vendaikkai poriyal) செய்து கொடுத்து பாருங்கள் எல்லோரும், குறிப்பாக குழந்தைகள்  விரும்பி உண்பார்கள்.

ஏனெனில் ,வெண்டைக்காயின் வழவழப்பு தன்மை பிடிக்காமலே பலரும் உண்ண விரும்புவதில்லை.ஆனால் வெண்டைக்காயின் சிறப்பே அதன் வழவழப்பு தன்மை தான்.

உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையால் தான் வெண்டைக்காயில் அதிக மருத்துவப் பயன்களுக்கு  காரணம்.

இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. அதாவது ,வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகளுக்கு வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த நிவாரணம் ஆகும்.

வெண்டைக்காய் பொரியல் (Vendaikkai poriyal) செய்யும் முறையை வீடியோவில் பார்ப்போம்.

வெண்டைக்காயின் சிறந்த மருத்துவ பயன்கள்

அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.

மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும்.குறிப்பாக கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்க உதவும்.

மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும் கூட.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டடைக்காயில் நிறையவே உள்ளது.

கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் ,நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. vendaikkaai poriyal ,annaimadi.com,vendikkaai recipe,poriyal recipe,healthy recipe,good food for kids,good  food for diabetes,ladies finger recipe

வெண்டைக்காயில் உள்ள விற்றமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.

vendaikkaai poriyal ,annaimadi.com,vendikkaai recipe,poriyal recipe,healthy recipe,good food for kids
 
மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் அடிக்கடி   வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும். வயதாகும் போது  ஏற்படும் ஞாபக மறதியையும் இது போக்கும்.
 
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் வரும்.
 
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு பிரிவினரும் நோய்த்தொற்றுக்கு  விரைவில் உள்ளாகின்றனர். காரணம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி  குறைவாக இருப்பதாகும்.ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் (antioxidants) அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக்8Health tonic) என்றே சொல்லலாம்.
வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்களைத்  கிடைப்பதோடு ,உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 
vendaikkaai poriyal ,annaimadi.com,vendikkaai recipe,poriyal recipe,healthy recipe,good food for kids  
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயராது. உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க வெண்டைக்காயை தாராளமாக சாப்பிடலாம்.
 
எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும் ஆகும்.
 
வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், இந்த அதீத பசி உணர்வை குறைத்து, அளவுக்கதிகமாக சாப்பிட தூண்டும் உடல் வேட்கையை கட்டுப்படுத்தும். உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு வெண்டைக்காய் உணவுகளை   சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

Leave a Reply

Your email address will not be published.