வெந்தயக்கீரையில் குழம்பு (Venthaya keerai kulampu)
வெந்தயக்கீரை ,சூட்டு உடம்பு உள்ளவர்களுக்கு மிக சிறந்தது ஆகும். அதிக நேரம் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு உடற் சூடு கூடி ஏற்படும் கண் நோய்களுக்கும் வெந்தயக்கீரை (Venthaya keerai kulampu) குளிர்ச்சியூட்டக் கூடியது.
சாதம், புட்டு, இடியப்பத்துடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும். சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!
சுவையான, சத்தான ஆரோக்கியம் தரும் குழம்பு!
வெந்தயக்கீரை குழம்பு செய்யும் முறை (Venthaya keerai kulampu)
வெந்தய கீரையை வாரம் ஒரு முறை வெந்தயக்கீரை வறை, குழம்பு, அல்லது வெந்தய கீரைக்கூட்டு போன்றவையாக உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும்.
வயிற்றுப் போக்கை நிறுத்தும். இந்தக்கீரையில் இரும்புசத்து அதிகம் இருப்பதால், மாதவிடாய் தொல்லைகளை நீக்கவும், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யுவும் , உடலை வளர்க்கவும் உதவுகின்றது.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். அதாவது , வெந்தயக்கீரை எளிதாக மல ஜலம் கழிய வழி செய்திடும். சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகை கீரை இது.
மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை நீக்கக் கூடியது. ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடியது. ஜீரண சக்தியை தூண்டக் கூடியது. வயிற்றுப்போக்கை தவிர்க்கக் கூடியது. நரம்புகளுக்கு வலுவூட்டக் கூடியது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது. மற்றும் வயதிற்கு முந்திய முதிர்ச்சியையும் முடி உதிர்வதையும் தவிர்க்கக் கூடியது.

