வில்வ இலை ஏன் புனிதமானது? (Vilvam)

வில்வம் (Vilvam), சிவனுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்வார்கள்.ஏனென்றால், வில்வத்தினுடைய அதிர்வுகள் நாம் சிவலிங்கத்தில்ல்  இருக்கும் அதிர்வுகளுடன், பெருமளவிற்கு நெருக்கமாக இருக்கிறது.

இதனால் தான் வில்வ இலைகளை சிவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம். அதன் மூலமாகத் தான் நாம், தெய்வீக சக்திகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

ஏனென்றால் வில்வத்திற்கு அந்த அதிர்வுகளைத் தக்க வைத்துக்கொள்ள கூடிய சக்தி, பெருமளவில் இருக்கிறது.

பழமையான சிவாலயங்களில் ஈசனிடம் இருந்த வெளிப்படும் அதிர்வு அதிகம் இருப்பதை பலரும் அனுபவப்பூர்வமாக அறிவார்கள்.

அத்தகைய அதிர்வு கொண்ட ஆலயங்களில், லிங்கத்தின் மீது போடப்படும் வில்வ தளங்கள், அந்த அதிர்வுகளை தம்முள் கிரகித்து வைத்துக் கொள்ளும்.

பூஜை முடிந்து அர்ச்சகர் அந்த வில்வ தளத்தை நம்மிடம் தரும் போது பக்தியுடன் வாங்கி சட்டை பை அல்லது கைப்பைக்குள் வைத்துப் பாருங்கள்.

வில்வ இலைகளில் தேங்கியுள்ள ஈசனின் அதிர்வலைகள் நம் உடலுக்குள் ஊடுருவும். அந்த அதிர்வலைகள் அபார சக்தி கொண்டவை.

அது நமது உடலிலும் உள்ளத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். வில்வ தளங்களுக்கு மட்டுமே இப்படி மூலவர் சிலையில் இருந்து நம்மிடம் அதிர்வலைகளை கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வில்வம்,Bael leaves,annaimadi.com,அன்னைமடி ,வில்வம் ஏன் புனிதமானது? Vilvam,வில்வ இலைகளை பறிக்க சில விதி முறைகள்,மருத்துவ ரீதியாக வில்வத்தின் பலன்கள்,Medicinal benefits of the bael leave,வீடுகளில் வில்வ மரம்,Why is the vilvam sacred?

லிங்கமூர்த்தி மீது வைத்து எடுக்கப்படும் வில்வ இலைகளை, நீங்கள் அர்ச்சகரிடம்.இருந்து கையில் வாங்கியதுமே, அந்த அதிர்வை உணர்வீர்கள்.

அந்த அதிர்வு உங்கள் உடல், மனம், ஆரோக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் மகிமை கொண்டது. இதனால் தான் வில்வ இலையை புனிதமாக கருதுகிறார்கள்.

அடுத்தத் தடவை சிவனை வழிபட்டு முடிந்ததும், மறக்காமல் வில்வ இலையை கேட்டுப் பெறுங்கள்.சிவ வழிபாட்டுக்கு எத்தனையோ மலர்கள் உகந்ததாக உள்ள போதிலும், வில்வ இலை தனித்துவம் கொண்டது. வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

வில்வம் ஏன் சைவ சிவ நெறியில் முதன்மையானது (Why the Vilvam is primary)

விஸ்வம் என்றால் புறத்தில் நிறைந்து இருப்பது என்று பொருள். அதாவது வெளியே எங்கும் நிறைந்து நிற்பது. உதாரணம் விஸ்வ நாதம் எல்லாவற்றிலும் நிறைந்த நாதம்.

வில்வம் என்பது அகத்தில் நிறைந்து நிற்பது என்று பொருள். அதாவது உள்ளே நிறைந்து நிற்பது என்று பொருள். நம்முடைய பூமியில் பல விதமான தாவரங்கள் உள்ளது. இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள்.

வில்வத்தின் துணை கொண்டு சிவபெருமானை எளிதாக நாம் அணுக முடியும். வில்வத்துக்கு மட்டும் எப்படி இந்த சிறப்பு கிடைத்தது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு சில காரணங்கள் உதாரணமாக கூறப்படுகின்றன. சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.

இது கடும் வெப்பத்தைக் கொடுக்கக் கூடியது. இதனால் ஈசனை சாந்தப்படுத்தவும், குளிர்ச்சிப்படுத்தவும் முனிவர்கள், ரிஷிகள் வில்வ தளத்தை பயன்படுத்தினார்கள். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது. வில்வ தளங்களால் ஈசன் குளிர்ச்சியை பெற்றார்.

எனவே தான் வில்வம், சிவபெருமானுக்கு பிடித்தமானதாக மாறியது. வில்வ இலைகளுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இதை உண்டால் நமது உடலில் இருந்து அதிக சக்திகள் வெளியாகாது.

வில்வம்,Bael leaves,annaimadi.com,அன்னைமடி ,வில்வம் ஏன் புனிதமானது? Vilvam,வில்வ இலைகளை பறிக்க சில விதி முறைகள்,மருத்துவ ரீதியாக வில்வத்தின் பலன்கள்,Medicinal benefits of the bael leave,வீடுகளில் வில்வ மரம்,Why is the vilvam sacred?

ஜீரணம் செய்த சக்தி கூட சேமிப்பாகி விடும். இதன் மூலம் சிவத்துக்குள் அதிக சக்தியை சேமிக்க செய்யும் ஆற்றல் வில்வ தளங்களுக்கு இருப்பதை நம் முன்னோர்கள் கண்டு பிடித்தனர்.

எனவே சிவார்ச்சனைக்கு மற்ற மலர்கள், இலைகளை விட வில்வ தளங்களை பயன்படுத்தினார்கள். வில்வம் இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றதால் “சிவமூலிகைகளின் சிகரம்” என்றழைக்கப்படுகிறது.

மிகுந்த குளிர் தன்மைகளை உடைய பெருமாளான நாராயணர் ஸ்ரீரங்கத்தில் தண்ணீரின் நடுவில் படுத்து இருக்கும் பொழுது வெப்பம் தேவை என வில்வ மரத்தில் அடியில் படுத்து இருக்கிறார்.

ஆம் நமக்கு, நம் குலத்தை தழைக்க வைக்கும் வில்வமே என்றும் நமக்கு தல விருட்சம் என்று நம்மாழ்வார் சொல்கிறார்

பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே வில்வ மரத்தை (Vilvam) மகாலட்சுமியின் வடிவமாக கருதுகிறார்கள். இதனால் வில்வ மரத்தை வழிபட்டால், ஈசனின் கருணை கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம்.

வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

வில்வதளம்

வில்வங்களில் (Vilvam)மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன.

வில்வ இலைகள் மூன்று தளம், ஐந்து தளம், ஏழு தளங்களாக இருப்பதை காணலாம். பெரும்பாலும் மூன்று இலைகளுடன் இருப்பதை வில்வ தளம் என்பார்கள்.வில்வம்,Bael leaves,annaimadi.com,அன்னைமடி ,வில்வம் ஏன் புனிதமானது? Vilvam,வில்வ இலைகளை பறிக்க சில விதி முறைகள்,மருத்துவ ரீதியாக வில்வத்தின் பலன்கள்,Medicinal benefits of the bael leave,வீடுகளில் வில்வ மரம்,Why is the vilvam sacred?

சிவனை மகிழ்ச்சிப்படுத்த ஒரே ஒரு வில்வதளம் போதும் என்பார்கள். மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள்.

மேலும் வில்வதளத்தில் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள்.

இதில் வில்வ தளங்களை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும் வேரை முக்கோடி தேவர்கள் என்றும் நம் முன்னோர்கள் போற்றி வழிபட்டுள்ளனர்.

எனவே தான் சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் விலகும். தோஷங்கள் ஓடோடி விடும் என்பார்கள்.

ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்ம பாவங்கள் விலகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிர்வலை இடமாற்றம் எப்படி நிகழ்கிறது தெரியுமா?

ஆயலங்களில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூல மூர்த்தியானது அஷ்ட பந்தனம், ராஜகோபுரம், கும்பாபிஷேகம் மூலம் எப்போதும் அதிர்வலைகளுடன் இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

வில்வம்,Bael leaves,annaimadi.com,அன்னைமடி ,வில்வம் ஏன் புனிதமானது? Vilvam,வில்வ இலைகளை பறிக்க சில விதி முறைகள்,மருத்துவ ரீதியாக வில்வத்தின் பலன்கள்,Medicinal benefits of the bael leave,வீடுகளில் வில்வ மரம்,Why is the vilvam sacred?

மருத்துவ ரீதியாக வில்வத்தின் பலன்கள் (Medicinal benefits of the Vilvam)

தினமும் வில்வ மரத்தடியில் தியானம் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஊளைச் சதை குறையும். வில்வ இலை பொடியை சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும். பல் வலி நீங்கும். சளி, இருமல், சைனசுக்கு வில்வ இலை பொடி சிறந்த மருந்தாகும்.

கொழுப்பு கட்டுப்படும். ரத்த அழுத்த பிரச்சனை தீரும். சர்க்கரை நோய் குணமாகும். அல்சர் பிரச்சனை வரவே வராது. ஜீரணக்கோளாறுகள் சரியாகும்.

உடல் குளிர்ச்சி பெறும். இதனால் தோல் சம்பந்தபட்ட எந்த வியாதியும் வராது. இன்னும் ஏராளமான மருத்துவ பலன் தரும் வில்வ தளத்தை பறிக்கும் போது பயபக்தியுடன் பறிக்க வேண்டும்.

 

அனைவரும்  ஒரு வில்வம் தழைக்க காரணமாக இருங்கள்.

அதி அற்புத பலன் பெறுங்கள்.

அன்பே சிவம். ஓம் நமசிவாய!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *