விபரீதகரணி/யோகாசனம் (Viparita Karani)

விபரீதகரணி ஆசனம் (Viparita Karani)  நமது உடலை தலைகீழாகபுவிஈர்ப்பு சக்தியை நோக்கி வைப்பதால் உடல் உறுப்புகள் வலிமை பெறுகின்றன.

விபரீதகரணி ஆசனம் (Viparita Karani) செய்யும் முறை(How to doViparitakarani Asana)

 • விரிப்பில்  மல்லாந்து படுத்துக்கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும்.
 • உள்ளேயே மூச்சை நிறுத்திக்கொண்டு நீட்டிய கால்களை ஒன்றாக அப்படியே மேலே தூக்க வேண்டும்.
 • தூக்கும்போதே இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.
 • இரு கைகளாலும் இடுப்பைத் தாங்கிய வண்ணம் கால்கள் மட்டும் செங்குத்தாகத் தூக்க வேண்டும்.
 • உடல் பாரம் முழுதும் பின் கழுத்து, நெஞ்சின் பின்புறப் பகுதி ஆகியவற்றால் தாங்க வேண்டும்.
 • இப்போது மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.
 • மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுத்து வெளியே விட்டு இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.விபரீதகரணி யோகாசனம் ,Viparita Karani,அன்னைமடி,annaimadi.com,விபரீதகரணி ஆசனம் செய்யும் முறை,விபரீதகரணி யோகாசனபலன்கள் Karani,Viparitakarani Asana,How to doViparitakarani Asana

ஆரம்பத்தில் இடுப்பைத் தூக்கிப் பிடிக்கச் சிரமமாக இருக்கும். அப்போது இரண்டு, மூன்று தலையணைகளை இடுப்புப் பக்கம் முட்டுக் கொடுத்துக்கொண்டு பயிற்சி செய்யலாம்.

அப்போது கைகளுக்கு வேலை இல்லாததால் அவற்றை இரு பக்கமும் கவிழ்ந்தாற்போல
வைத்துக் கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவை

 • பகலில் 200 எண்ணிக்கைக்கு மேல் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் பகலிலேயே தூக்கம் வரும்.
 • இரவில் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் செய்துவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து சாப்பாடு சாப்பிட்டு விட்டு, 1 டம்ளர் சூடாக தண்ணீர் குடித்து விட்டு படுத்தால், ஆழ்ந்த நித்திரை ஏற்படும்.
 • தலையணையை வைத்து செய்வதுதான் பாதுகாப்பானது… அதிக பலனும் அளிக்கும்.
 • முதுகு வலி, கழுத்து வலி, நீரிழிவு, ஆஸ்துமா, தலைவலி, அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள், இந்த ஆசனத்தை மட்டும் இரவில் செய்து வந்தால் நோய்கள், வலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

செய்முறை (Viparita Karani)

 • கால்களை  நீட்டி  உட்கார  வேண்டும்.
 • வலக்காலை மடக்கி, பாதம் பின்புறம்  பார்த்திருக்குமாறு  வைக்க  வேண்டும்.
 • இடக்காலை மடக்கி, இரு பாதங்களையும் ஒன்று சேர்த்து, புட்டங்களை கிடத்தி  அமர்ந்து  வஜ்ராசன  இருக்கைக்கு வர வேண்டும்.
 • மூச்சினை உள்ளிழுத்தவாறு முழங்கைகளின் உதவியால் மல்லாந்த நிலையில் உடலைக் கிடத்தவும்.
 •  சாதாரண சுவாச நிலையில் இரு கைகளையும் மடக்கி ஒன்று மீது ஒன்று வைத்து, தலையைக் கிடத்தவும். இந்த நிலையில் 5 விநாடிகள் நீடிக்கவும்.
 • பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள் (Viparita Karani)

விபரீதகரணி யோகாசனம்  (Viparita Karani) மார்புக்கு நல்லது. சுவாச நோய்களுக்கும் நிவாரணம் தரும். நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை வராது.

கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் ஏற்படுவதால் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்யும்

முதுகும் கால்களும் வலுவடையும்.
முழங்கால்,  கணுக்கால்  பிடிப்பினை நீக்கும்.
 தைராய்டு சுரப்பிக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மனதையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம் அளிக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *