உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்? (Virus on smartphone)
உங்கள் ஸ்மார்ட்போன் முறையாக செயல்படாமல், பிரச்சனையாக உள்ளதா? குறிப்பாக, வைரஸ் பிரச்சனை (Virus on smartphone) இருந்தால், நிச்சயம் நீங்கள் அதனை விரைவாக சரி செய்ய வேண்டும்.
குடும்பம், உறவினர்கள், நண்பர்களுடன் உரையாடுவதற்கு பயன்படுவது மட்டுமின்றி, அதில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் வீட்டில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்து கொள்ள முடிகிறது.
ஆன்லைன் கிளாஸில் பங்கேற்க வேண்டுமென்றால், ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். சோர்வாக இருக்கும் போது ஒரு போன் கையில் இருந்தால் நேரம் போவது கூட தெரியாது.
அந்தளவுக்கு மக்களை மிகவும் கம்பர்ட் ஜோர்னரில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு, வைரஸ் அச்சுறுத்தல்கள் (Virus on smartphone) இருந்து கொண்டே இருக்கிறது.
ஹேக்கர்களின் ‘குறி’
ஸ்மார்ட்போன்கள் மூலம் வீட்டில் இருந்தே பணப்பரிவர்த்தனை முதல் அனைத்து விஷயங்களையும் மேற்கொள்ள முடியும் என்பதால், இது ஹேக்கர்களின் குறியாக மாறியுள்ளது.
அவர்கள் வைரஸ் மற்றும் ட்ரோஜன் ஆகியவற்றை பயன்படுத்தி, அப்பாவி ஸ்மார்ட்போன் யூசர்களை இலக்காக மாற்றுகின்றனர். அதன்மூலம் பணப்பரிவர்த்தனை மற்றும் தனிநபர் தகவல்களை(Personal information) திருடி மோசடி செய்கின்றனர்.
டெக்னாலஜியில் கில்லியாக இருப்பவர்களிடம் கூட, ஹேக்கர்கள் கைவரிசை காட்டிவிடுகின்றன. அதற்கு முக்கிய காரணம் சில செயலிகள் மற்றும் செல்போனுக்கு வரும் தேவையற்ற லிங்குகளை(Links) அசாதாரணமாக கிளிக் செய்யும் போது, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்றுவிடுகிறோம்.
ஸ்மார்ட்போனை எவ்வாறு பாதுகாப்பது?(Virus on smartphone)
சரி, இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க என்ன தீர்வு?
கூடுமானவரை வைரஸ் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க சில அடிப்படையான விஷயங்களை பின்பற்றினாலே போதும்.
பிரவுசர் (Browser) உள்ளிட்ட பக்கங்களில் இருந்து தேவையற்ற ஆப்களை(App) பதிவிறக்கம் (Download) செய்வதை தவிர்க்க வேண்டும். கூகுள் பிளே ஸ்டோர்ஸ் (Play store) உறுதி செய்திருக்கும் செயலிகளை மட்டுமே, அந்த ஆப்பில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யும் செயலிகளாக இருந்தால் கூட, அந்த செயலிகளுக்கு அனைத்து அனுமதிகளையும் கொடுக்கக்கூடாது. அந்த செயலியின் தேவைக்கான அனுமதியை மட்டுமே இன்ஸ்டால் (Install) செய்யும்போது கொடுக்க வேண்டும்.
வைரஸ் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? (How to detect the presence of a virus)
கண்ணில் எண்ணெய் ஊற்றியது போல பார்த்து கொண்டிருந்தாலும் கூட, புறவாசல் வழியாக வைரஸ்கள் செல்போன்களுக்குள் நுழைந்துவிடுகின்றன.
அதாவது முன்னெச்சரிக்கையாக இருக்கும் சமயங்களில் கூட வைரஸ், ட்ரோஜன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. இந்தமாதிரியான சூழல்களில் சில டிரிக்ஸைக் பயன்படுத்தி உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
1. உங்கள் அனுமதி இல்லாமல் செயலிகள் அல்லது வேறு ஏதேனும் ப்ரீமியம் (Premium) பயன்பாடுக்காக உங்கள் அக்கவுண்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அல்லது, உங்களின் அனுமதி இல்லாமலேயே ப்ரீமியம் மெசேஜ் அல்லது அழைப்புகள் செல்லும்.
2. அதிகப்படியான விளம்பரங்கள் உங்கள் செல்போனில் தோன்றிக்கொண்டிருந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் உங்கள் செல்போனுக்குள் நுழைந்திருக்கலாம்.
3. உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்போது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
4. உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் முன்புபோல் இருக்காது. அடிக்கடி ஹேங்க் ஆகும் அல்லது மிகவும் ஸ்லோவான ஸ்பீடில் புரோகிராம்கள் இயங்கும்.
5. புதிய செயலிகள் உங்கள் அனுமதியில்லாமல் பதிவிறக்கமாகியிருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக உஷாராகிக்கொள்ளுங்கள்.
6. விரைவாக டேட்டா தீர்ந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கலாம். ஏனென்றால், அவையே டேட்டாக்களை அதிகம் யூஸ் செய்யும்.
7. பேட்டரி திடீரென குறையும், போன் சூடாகவும். இவையெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்கள்(Virus on smartphone) இருப்பதற்கான அறிகுறி.