விற்றமின் குறைபாடுகளும் அறிகுறிகளும் (Vitamin deficiency and Symptoms)

விற்றமின்கள் உடலுக்கு  நாளும் மிகக் குறைந்த அளவே தேவைப்படுகிறது. எனினும் அவை சரியான அளவில் கிடைக்க வேண்டியது மிக அவசியம்.இல்லையேல் விற்றமின் குறைபாட்டால் (Vitamin deficiency and Symptoms) உடலில் ஆரோக்கியக் குறைக்கான பல அறிகுறிகள் தோன்றும்.நோய்கள் உருவாக ஏதுவாகும்.

ஏனைய சத்துக்களை போதியளவு பெற்றாலும் இவை இல்லாவிட்டால் உடலின் செயற்பாடுகளில் பல பிரச்சனை ஏற்பட்டு நோய் வாய்ப்பட நேரிடும்.

இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை, கொழுப்பில் கரையும் விற்றமின்கள் – ஏ, டி, ஈ, கே. தண்ணீரில் கரையும் விற்றமின்கள் – பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், விற்றமின் சி.

 • உடலில் காணப்படும் விற்றமின் சத்து குறைபாடு.
 • குறைபாடு ஏற்படக் கூடிய காலங்களை தவிர்க்க. (உ.ம்) கர்ப்ப காலம், அறுவை சிகிச்சை, நோய் பாதிப்பு.
 • சில நோய் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன் நடவடிக்கையாக. மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே விற்றமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சைவ உணவு உண்பவர்களுக்கு கண்டிப்பாக விற்றமின் பி12 சத்து மாத்திரை தேவைப்படும். அன்றாடம் விற்றமின் சத்து என்பது இன்சூரன்ஸ் பாலிஸி போன்றது. ஆகவேதான் ஒரு மல்டி விற்றமின் என்பது அதிக சிபாரிசு பெறுகின்றது.

விற்றமின்கள் குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள்  (Vitamin deficiency and Symptoms)

 • ஆரோக்கியமான உணவிவை உட்கொள்ளல்.
 • மருத்துவ ஆலோசனையோடு ஒரு சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.
 • விற்றமின் ‘டி’ சத்து தேவையா என அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
 • மிக அதிக அளவிலான விற்றமின்மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சரியாகாது.
 • நீரில் கரையும் விற்றமின்கள்
 • போலேட் எனப்படும் இந்த விற்றமின் பிறவி குறைபாடுகளை நீக்கும்.

விற்றமின் ஏ (Vitamin-A Deficiency)

ரெடினால் என்றும் சொல்லப்படும். இந்த விற்றமினுக்கு உடலில் பல வேலைகள் உள்ளன.அதிக வெளிச்சம், குறைந்த வெளிச்சம் இவற்றிக்கு கண் தன்னை சரி செய்து கொள்வது இந்த விற்றமினால் தான். எலும்பு வளர்ச்சி, பல் வளர்ச்சி, திசுக்களின் வளர்ச்சி நோய் எதிர்ப்பு சக்தி இவை அனைத்திற்கும் இந்த விற்றமின் பொறுப்பு.

சருமம், கண், வாய் உள்தசை, மூக்கு, தொண்டை, நுரையீரல் இவை ஈரப்பதத்தோடு இருப்பதும் இந்த வைட்டமினையே சார்ந்துள்ளன. மேலும் ஒரு சில வகை புற்று நோய்களையும் விற்றமின் ‘ஏ’ தவிர்க்கும். பல வகை உணவுகள் உண்ணும் பொழுது அதாவது பால் பொருட்கள், மீன், கல்லீரல் இவற்றிலிருந்து விற்றமின்ஏ கிடைக்கின்றது.

தாவர வகையிலிருந்து அடர்ந்த பச்சை நிறம் கொண்ட இலைகள், காய்கறிகள், கரட், பரங்கிகாய் இவையெல்லாம் விற்றமின் ‘ஏ’ கிடைக்கும் உணவுப் பொருட்கள். விற்றமின்‘ஏ’ கல்லீரலில் தேக்கி வைக்கப்படுகின்றது.

அதனால் தான் இச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது 2 வருடம் வரை கூட அறிகுறிகள் தெரிவதில்லை. இரவு கண் தெரியாமை, சொரசொரப்பான வறண்ட சருமம், எளிதில் உடல் நோய் வாய்படுதல், எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவை விற்றமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்.

விற்றமின் ‘ஏ’ அதிகம் இருந்தால்; அதாவது அன்றாடம் 3000 மைகி மேல் உடல் பெற்றால் வறண்ட சருமம், சருமத்தில் அரிப்பு  , தலைவலி, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, பார்வை சரியின்மை, தலைசுற்றல், இடுப்பு எலும்பு முறிவு போன்றவை ஏற்படும்.

விற்றமின் பி குறைபாடு (Vitamin F Deficiency)

விற்றமின் பி பிரிவு குறைபாடுகளை சோர்வு, அதிக படபடப்பு, வெளிர்ந்த சருமம், வறண்ட நாக்கு, ஈறில் இரத்த கசிவு, வயிறு பாதிப்பு, எடை குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறிய முடியும்.

தயமின் எனப்படும் பி1 குறைபாட்டால் சோர்வு, நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு ஏற்படும். ஓட்ஸ், கைகுத்தல் அரிசி, காய்கறி, உருளைக்கிழங்கு, முட்டை இவற்றிலிருந்து இந்த விற்றமின் கிடைக்கும்.

ரிபோப்ளேவின் எனப்படும் பி2 குறைபாட்டால் நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண் ஏற்படும். இந்த வைட்டமின் பால் பொருட்கள், வாழைப்பழம், பச்சை வாழைப்பழம் இவற்றில் கிடைக்கும்.

நியாசின் எனப்படும் பி3 சரும பாதுகாப்பு, ஜீரண செயல்பாடுமுறை, கெட்ட கொழுப்பு நீக்குதல் போன்றவற்றை கொடுக்கும். ஆயினும் அதிகம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அசைவம், மீன், முட்டை, காய்கறி இவற்றில் பி3 விற்றமின் சத்து கிடைக்கும்.

பன்டோதினிக் ஆசிட் எனப்படும் பி5 விற்றமின் உடல் உணவிலிருந்து சத்து எடுத்துக் கொள்ள உதவும். சில ஹார்மோன்கள், கொலஸ்டிரால் உருவாக்கவும் உதவுகின்றது. குறைபாடு ஏற்படும் பொழுது பராஸ்திஷியா என்ற பாதிப்பு ஏற்படும். விற்றமின் பி5 அதிகமானால் வயிற்றுப் போக்கு, பிரட்டல், நெஞ்நெரிச்சல் பி5 சத்து அசைவ உணவு, மீன், முட்டை, காய்கறி இவற்றிலிருந்து கிடைக்கின்றது.

பிரிடாக்ஸின் எனப்படும் பி6 விற்றமின்சத்து உடலின் ரசாயன மாற்றங்களுக்கு உதவுகின்றது. இரத்த சோகை இதன் குறைபாட்டால் ஏற்படும்.

இந்த சத்து அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படும். அசைவம் காய்கறி, கொட்டைகள், வாழைப்பழம் இவற்றில் பி6 விற்றமின் சத்து கிடைக்கிறது.

பயோடின் எனப்படும் பி7 வைட்டமின் சத்தில் குறைபாடு ஏற்பட்டால் சரும பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்படும். முட்டை, கடலை, கீரை இவற்றில் எளிதாய் இச்சத்து கிடைக்கும்.

சயன கோபாளமின் எனப்படும் விற்றமின் பி12 ரத்த அணுக்கள் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றுக்கு அத்தியாவசமானது. இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். அசைவ உணவிலேயே இது அதிகம் கிடைக்கின்றது.

பையோட்டின் என்றால் வைட்டமின் பி7 குறைபாடு

 வறட்சியான முடி (Dry hair), முடி உதிர்தல்  (Hair fall),  கை, கால் நகங்கள் சுலபமாக உடைந்து போதல் (Broken Nails)  மற்றும் நகங்களில் தோல் உரிதல் (Skin peeling in nails) போன்ற அறிகுறிகள் புரத குறைபாட்டால் ஏற்படுகின்றது.

மரபணு குறைபாடு (பரம்பரை குறைபாடு) இல்லாமலே தலைமுடி உதிர்ந்து சொட்டை விழுதல். கை, கால் நகங்கள் சுலபமாக உடைந்து புண் ஏற்பட்டு கைகளால் வேலை செய்ய முடியாமல் போகலாம், கால்களால் நடக்க முடியாமல் போகலாம்.

முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் புரதச்சத்தின் (Biotin) அளவு அதிகமாக உள்ளது.  முட்டையை வேக வைத்து பின் சாப்பிட வேண்டும்.

விற்றமின் சி (Vitamin-c Deficiency)

உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணம் விற்றமின் சி. பல், சருமம், எலும்பு, ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த விற்றமின் மிகவும் அவசியமாகின்றது.

தேசிக்காய் , ஒரேஞ்  போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிகமாகவும், ஏனைய பழங்களிலும் , காய்கறிகளிலும் விற்றமின் சி கிடைக்கின்றது.     பல் துலக்கும் போது ஈறுகளில் இரத்தம் வடிதல், நாக்கில் புண் மற்றும் கொப்புளங்கள் உண்டாவது எல்லாம் உடலில் விற்றமின் சி குறைபாட்டால் (Vitamin deficiency and Symptoms) ஆகும்.

விற்றமின் சி குறைபாட்டால் ,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அனைத்து நோய்களும்  உடலிற்குள் நுழையும் நிலை ஏற்படும். மேலும் கொழுப்பின் அளவு அதிகமாகி உடல் பருமன் ஏற்படும். 

ஸ்ராபெரி, கொய்யா, ஆராஞ்சு, எலுமிச்சை, பப்பாளி மற்றும் மலை நெல்லிக்காய் போன்றவற்றில் விற்றமின் சி  கிடைக்கும்.

விற்றமின் டி (Vitamin-D Deficiency)

உடல் உபயோகத்திற்கான கல்சியம், பொஸ்பரசில் விற்றமின் டி மிக முக்கிய பங்காற்றுகின்றது.சிறு குடலில் இருந்து நன்கு கல்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் உருவாகவும், பாதுகாக்கப்படவும் விற்றமின்‘டி’யே காரணமாகின்றது.

திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றது.

குழந்தைகளுக்கு நல்ல எலும்பும், பல்லும் பெற விற்றமின் ‘டி’ மிக அவசியம். பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் இவற்றிலிருந்து வைvirraமின் ‘டி’ கிடைக்கின்றது.

இத்தோடு சூரிய ஒளியில் சருமமே விற்றமின் ‘டி’யை உற்பத்தி செய்கின்றது.

இளம் காலை வெயில், மாலை வெயில் பொழுதில் கை, கால், முகத்தில் வெயில் படும் படி 10 நிமிடங்கள் இருக்கலாம். அதிக நேரம் வெயிலில் இருப்பவர்கள் ‘சன் ஸ்கீரின்’ அவசியம் உபயோகிக்க வேண்டும்.

விற்றமின் ‘டி’ குறைபாடு (Vitamin deficiency and Symptoms) ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் எனப்படும் வளைந்த கால்கள், பெரியோருக்கு எலும்பு அடர்த்தி குறைதல் ஏற்படுகின்றது.

ரத்தக் கொதிப்பு, நோய் பாதிப்பு எளிதில் ஏற்படுகின்றது.

 • குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தாய்பால் மட்டும் பெறும் சிறு குழந்தைகள்.
 • அடர்ந்த நிறம் கொண்டோர்
 • முதியோர்
 • நோயாளிகள் ஆகியோருக்கு விற்றமின் ‘டி’ குறைபாடு ஏற்படுகின்றது. அதிக அளவு விற்றமின் ‘டி’ ரத்தத்தில் அதிக கல்சியம், உடல், மன வளர்ச்சி குறைவு, வயிற்று குமட்டல், வாந்தி இவற்றினை ஏற்படுத்தும்.

விற்றமின் ‘டி’ மனித உடலிலேயே ஓரளவு உற்பத்தி ஆகக்கூடியது. கொழுப்பில் கரையக்கூடியது. மனித எலும்பு மண்டலத்தின் வளர்ச்சி காரணிகள் விற்றமின் ‘டி’ ஆகும்.

உடல் எடை கூடுதல், உலர்ந்த தோல்பகுதி, செரிமானப் பிரச்சனைகள், கை கால் மூட்டு வலி ஏற்படுதல், வியர்வை அதிகமாக சுரப்பது மற்றும் இரத்த கொதிப்பு போன்றவை விற்றமின்மின் ‘டி’ குறைப்பாட்டால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும்.

பால், காளான், முட்டை மற்றும் மீன்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும், சூரிய ஒளியில் நடமாட வேண்டும்.

விற்றமின் ஈகுறைபாடு (Vitamin E Deficiency)

விற்றமின் ஈ உடலில் விற்றமின் ஏ,சி, சிகப்பு அணுக்கள் நல்ல அமினோ அமிலங்கள் இவற்றை காக்கின்றது. நல்ல பழங்கள், காய்கறிகள் மூலமே இவற்றைப்பெற முடியும் என சமீபத்திய ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் இவைகள் மூலம் விற்றமின் ஈ சத்து கிடைக்கின்றது.

நமது உடலில் புண்கள் ஏற்பட்டால் அவற்றை சரி செய்வது விற்றமின் ‘ஈ’ ஆகும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இரத்தக்குழாய்களில் வெட்டு ஏற்படும் போது பாதிப்பை குறைந்தளவு செல்களுக்கு விட்டுகொடுத்து மீதம் உள்ள செல்களை பாதுகாப்பதும் விற்றமின் ‘ஈ’ ஆகும்.

வைட்டமின் ‘ஏ’ செயல்படுவதற்கான காரணிகளை விற்றமின் ‘ஈ’ உருவாக்குகிறது.

கை, கால் தசைப்பிடிப்பு Muscles Cramp

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பாட்டில் சேரத்தக் கொள்ளுதல்  அவசியம்.. விளக்கெண்ணை  குளியல் Almond oil

விற்றமின் எப் குறைபாடு (Vitamin F Deficiency)

அபூரித கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பொதுவாக விற்றமின் எப் என்று அழைக்கப்படுகிறது.

கொழுப்பில் கரையக்கூடிய விற்றமின்கள் ‘ஏ’, ‘டி’, ‘ஈ’, ‘கே’ ஆகியவை கொழுப்பில் கரைந்த பின் நமது உடல் சேர்வதற்கு விற்றமின் ‘எப்’ மிக தேவைப்படுகிறது.

 மூச்சு விடுவதற்கும், ஆக்ஸிஜனை உட்கவர்வதற்கும், தோலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், இரத்தில் உள்ள கால்சியம் திசுக்களுக்குள் உடுருவிச் செல்வதற்கும் வைட்டமின் ‘எப்’ இன்றியமையாதாக உள்ளது.

 விற்றமின்கள் ‘ஏ’, ‘டி’, ‘ஈ’, ‘கே’ ஆகியவை சரியான அளவு உடலில் இருக்கும் போது விற்றமின் ‘எப்’ என்ற அபூரித கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) என்பதும் ஒழுங்காக செயல்படும்.

விற்றமின் கே (Vitamin K Deficiency)

விற்றமின் கே பாக்டீரியாவால் குடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றது. ரத்தம் கெட்டிப்பட, எலும்பின் ஆரோக்கியம், ரத்தம், எலும்பு, சிறுநீரகம் இவற்றிக்கான புரதம் அளிக்க உதவுகின்றது.

முட்டை கோஸ் பச்சை முட்டைகோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இவற்றிலிருந்து விற்றமின் கே கிடைக்கின்றது.

போதுமான அளவு விற்றமின் கே உடலில் இல்லை எனில் சிறு காயத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு விற்றமின் கே. குறைபாடு ஏற்படும்.

மிக அதிக அளவு விற்றமின் கே; திசுக்களுக்கும் கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மது உடலில் குடலில் காணப்படம் பாக்டீரியா, வைட்டமின் ‘கே’யை உற்பத்தி செய்கின்றது.

எனவே, நமது குடலில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் ஒழிய இந்த வைட்டமின் ‘கே’ பெரும்பாலும் பற்றாக்குறையாவதில்லை. உருவாக்குகிறது.

அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி (Frequent stomach pain). இரத்த உரையாமை.

வீட்டு சாப்பாட்டை சரிவிகித உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

 வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் பான் பாக்கு மசாலா போடுவது, மற்றும் மது அருந்துவதை கைவிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 இரத்தம் உறையைமை மூலம் அதிக இரத்த இழப்பு (Heavy blood loss). இரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை இரத்ததில் குறைந்து கொண்டே வரும்.

தெரிந்துகொள்ளவேண்டியவை

நாளும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

 • கொழுப்பில் கரையும் விற்றமின் ஏ,டி,ஈ,கே இவை நீண்ட காலம் உடல் சேகரிப்பில் இருக்கும்.
 • லீட்டா கரோட்டினை உடல் விற்றமின் ‘ஏ’வாக மாற்றும். இது காய்கறி பழங்களில் அதிகம் உள்ளது.
 • குறைவான விற்றமின் டி, உடலுக்கு தேவையான சூரிய வெளிச்சம் இன்மை இவை இன்றைய மருத்துவ பொதுநல கவலையாக உள்ளது. விற்றமின் ஈ உடலின் பாதுகாப்பு.
 • குடலில் உள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் விற்றமின் கே, கீரைகளில் அதிகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.