விற்றமின் கே இன் அவசியம் (The necessity of Vitamin K)

இரத்தம் உறைவு, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றுக்கு விற்றமின் கே (Vitamin K)  அத்தியாவசியமானது. விற்றமின் கே 1 அல்லது ஃபைலோகுவினோன் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது.

விற்றமின் கே 1 மற்றும் விற்றமின் கே 2 இரண்டுமே இரத்த உறைவுக்கு உதவும் புரதங்களை உருவாக்குகிறது. இரத்த உறைவு அல்லது உறைதல் அதிக இரத்தப்போக்கு உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ தடுக்கிறது.

உடலில் போதுமான புரதங்களை உற்பத்தி செய்ய விற்றமின் கே அவசியம். விற்றமின் கே குறைபாடு ஏற்பட்டால், அதிக ரத்தபோக்கு ஏற்படும் அபாயம் நிகழும்.

உணவு மற்றும் உடல் உற்பத்தி செய்யும் இந்த விற்றமின் கே  ஆனது சில மருந்துகள் மற்றும் மருத்துவ நிலைமைகளாலும் உடலில் உற்பத்தியை குறைக்க செய்துவிடும் இது பெரியவர்களுக்கு உண்டாகும் குறைபாடு.

குழந்தைகளே அதிகமாக விற்றமின் கே குறைபாட்டை கொண்டிருக்கிறார்கள்.

விற்றமின் கே யின் நன்மைகள்

 • குருதி உறைதலைக் கட்டுப்படுத்துகின்றது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கு குருதி உறைதல் முக்கிய காரணமாகும்.
 • விற்றமின் கே ஒஸ்டியோபொரோசிஸ் நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இன்று வயதான பலரும் முக்கியமாக பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது தெரிந்ததே. தாவர இலை உணவுகளை தினமும் உபயோகித்து வந்தால் ஒஸ்டியோபொரோசிஸ் வருவதிலிருந்தும்  பாதுகாப்பு கிடைக்கும்.
 • நீரிழிவு ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
 • அழற்சியைத் தடுக்கும் குணம் விற்றமின் கே க்கு இருப்பதால் மூட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
 • இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதை தடுக்கும் ஆற்றலும் விற்றமின் கே க்கு உண்டு.

விற்றமின் கே இன் அவசியம் ,The necessity of Vitamin K,விற்றமின் K,அன்னைமடி,annaiamadi.com,விற்றமின் கே யின் நன்மைகள்,விற்றமின் கே குறைபாட்டின் அறிகுறிகள் Symptoms of vitamin K deficiency,விற்றமின் கே குறைபாட்டுக்கான காரணங்கள் Causes of Vitamin K Deficiency,விற்றமின் கே இருக்கும் உணவுகள்,Vitamin K-rich foods

 

விற்றமின் கே குறைபாட்டின் அறிகுறிகள் (Symptoms of vitamin K deficiency)

அதிகப்படியான இரத்தப்போக்கு விற்றமின் கே குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகும்.ஆனால் இது காயம் ஏதேனும் ஏற்படும் போது தான் கண்டறிய முடியும்.

 • இலேசான காயத்துக்கும் சிராய்ப்பு
 • நகங்களில் இரத்தப்போக்கு அல்லது இரத்தக்கட்டிகள்
 • உணவுப்பாதையில் ஏதாவது ஒரு இடத்தில் இரத்தப்போக்கு இருப்பது
 • சருமம் வெளிறிபோவது மற்றும் பலவீனம்
 • மலம் கழிக்கும் போது இருண்ட நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து வருவது
 • சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது, எலும்பு பலவீனமாக இருப்பது, சருமத்தில் தடிப்புகள், விரைவான இதயத்துடிப்பு இவையெல்லாம் விற்றமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்.
 • பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடி பகுதி அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரத்தபோக்கு,
 • தோல் மூக்கு ,ஆண்குறியில் இரத்தபோக்கு போன்றவை எல்லாம் குழந்தைகளுக்கான அறிகுறிகள்

விற்றமின் கே குறைபாட்டுக்கான காரணங்கள் (Causes of Vitamin K Deficiency)

இந்த விற்றமின் கே குறைபாடு எந்த வயதிலும் உண்டாகலாம். பிறந்த குழந்தைக்கு அதிகமாக விற்றமின் கே குறைபாடு உருவாக வாய்ப்புண்டு.

தாய்ப்பாலில் விற்றமின் கே குறைவாக இருப்பதால் குழந்தைக்கு பற்றாக்குறை உண்டாகிறது. புதிதாக பிறந்த குழந்தைக்கு விற்றமின் கே பற்றாக்குறை இருக்கும் போது கல்லீரலில் பாதிப்பு உண்டாகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு, கல்லீரல் நோய், போதுமான அளவு உணவு உட்கொள்ளாதது, நோய்த்தொற்று, இரத்த உறைவு தடுப்புக்கு சிகிச்சையளிக்க கொடுக்கும் மருந்துகள் போன்றவை விற்றமின் கே குறைபாட்டை உண்டாக்க காரணமாகிறது.

பொதுவாக இரத்தம் உறைவதற்கு 11 முதல் 13. 5 வினாடிகள் ஆகும். இதை விட அதிக நேரம் எடுத்தால் அது விற்றமின் கே குறைபாடாக இருக்கலாம்.

விற்றமின் கே இன் அவசியம் ,The necessity of Vitamin K,விற்றமின் K,அன்னைமடி,annaiamadi.com,விற்றமின் கே யின் நன்மைகள்,விற்றமின் கே குறைபாட்டின் அறிகுறிகள் Symptoms of vitamin K deficiency,விற்றமின் கே குறைபாட்டுக்கான காரணங்கள் Causes of Vitamin K Deficiency,விற்றமின் கே இருக்கும் உணவுகள்,Vitamin K-rich foods

​விற்றமின் கே அதிகம் உள்ள உணவுகள் Foods High in Vitamin K

பச்சை இலை காய்கறிகள், முட்டைகோஸ், ப்ரக்கோலி என விற்றமின் கே நிறைந்த உணவுகளாக பரிந்துரைக்கப்படுகிறது.

 தினசரி ஆண்களுக்கு 120 மைக்ரோகிராம், பெண்களுக்கு 90 மைக்ரோகிராம் அளவும் தேவை.
, காலே,  உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள், தாவர எண்ணெய்கள், அவுரி நெல்லி மற்றும் அத்தி பழங்கள், சீஸ், சுண்டல், சோயாபீன்ஸ், பச்சை தேயிலை தேநீர் போன்றவை எடுத்துகொள்ளலாம்

இறைச்சி, விலங்குகளின் கல்லீரல், முட்டையின் மஞ்சள் கருக்களில் உள்ளது. மேலும் குடலும் இந்த விற்றமின் கே யை உருவாக்குகிறது.

தாவர இலை உணவுகளில் உள்ள விற்றமின் கே இயற்கையான பாதுகாப்பைக் கொடுக்கும்.

விற்றமின் கே உணவு வழியே எடுத்துக் கொள்வதே சிறப்பு!

மருந்து மாத்திரைகள் வழியாக எடுத்துகொள்வதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துகொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.