விற்றமின்கள் தெரிந்ததும் தெரியாததும் (Vitamins)

உடலில்  ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதாக உணர்ந்தால் வைத்தியரின் ஆலோசனைப்படி விற்றமின் (Vitamins) மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.

”எப்பவும் களைப்பாக  இருக்கிறது . சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியவில்லை , தலை முடி உதிர்கிறது,பார்வை மங்குகிறது,.   என இப்படி எல்லாவற்றிற்கும் விற்றமின் மாத்திரைகளை சுயமாக வாங்கி பாவிப்பது தவறு.     

ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டது போய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம்.

யாரெல்லாம் விற்றமின் (Vitamins) மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம் என்று வரையறைகள்  இருக்கின்றது. விற்றமின் மாத்திரைகளிலும் பக்கவிளைவுகள் ஏற்படும்.

ஊட்டச்சத்து (Vitamins) குறைபாடுகளை சரி செய்யும் உணவுகள் 

உணவு மூலமே  அநேகமான ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்து விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில் மருத்துவ ஆலோசனை பெற்று விற்றமின் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

உதாணத்திற்கு , முடி கொட்டுவதாக இருந்தால் அதை உணவு மூலம் எப்படி சரி செய்யலாம் என யோசிப்பதை விட்டு விட்டு, உடனே ஏதாவது மாத்திரைகளை நாடுவது தவறு.

பொதுவாக விற்றமின்களை, நீரில் கரைபவை, கொழுப்பில் கரைபவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில், பெரும்பாலானவற்றை நம் உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே உணவு மற்றும் மாத்திரைகள் மூலமாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்ற பாதிப்புகள்
விற்றமின் ஏ குறையும் போது ஏற்படும்.

கரட், பப்பாளி, மஞ்சள் நிற குடைமிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கீரை இவற்றை சாப்பிடுவதன் மூலம்  இக்குறைபாட்டைத் தவிர்க்கலாம்.

சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா கதிர்களினால் உற்பத்தி செய்யப்படும் விற்றமின் டி, எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைப்பதற்குத் தேவை.

சூரிய ஒளி அதிக அளவில் கிடைக்காத சிறியவர்களுக்கு ரிக்கட்ஸ், வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

இதைத் தடுக்க, மீன் எண்ணெய், முட்டை, இறைச்சி, ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவினைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். பாலுடன் கலந்து விற்றமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

விற்றமின் சி உள்ள உணவுப் பொருள்களுடன், இரும்பு நிறைந்த பேரீச்சை, திராட்சை போன்றவற்றையும் சேர்த்து உண்ணலாம்.

விற்றமின் இ மிகச் சிறந்த ‘ஆன்டி ஆக்சிடன்டாக’ செயல்பட்டு புற்றுநோயைத் தடுக்கிறது. இது குறையும்போது வயதான தோற்றம், குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இந்த சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க பாதாம், முளைகட்டிய கோதுமை, பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உணவு செரித்தலின் போது குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் விற்றமின் கே சத்தின் அளவு குறைந்தால், ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கரட், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், சோயா எண்ணெய் இவற்றை தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம், இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.

annaimadi.com,vitamins,benefits of vitamins,foods &vitamins,அன்னைமடி,விற்றமின்கள் அறிந்ததும் அறியாததும்,ஊட்டச்சத்துக்கள்
நீரில் கரையும் தன்மையுள்ள பி மற்றும் சி விற்றமின்கள் உடலில் அதிகம் சேர்ந்தாலும் சிறுநீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். எனவே, இந்த இரண்டு விற்றமின்களை உணவின் மூலமாக எடுத்துக்கொள்ள முடியாத போது, மாத்திரைகளாக எடுத்துக் கொள்ளலாம்.

ஏ, டி, கே போன்ற விற்றமின்களை கொழுப்புள்ள உணவுப் பொருட்களுடன்  மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது.

விற்றமின் (Vitamins) அதிகரிப்பதால் வரும் பிரச்சனைகள்

விற்றமின் ஏ

அன்றாடம் சராசரியாக 4,500 மைக்ரோ கிராம் விற்றமின் ஏ தேவை. இதற்கும் அதிகமாக இந்த விற்றமின் நம் உடலில் சேரும் போது ‘ஹைப்பர் வைட்டமினோசிஸ்’ என்னும் டாக்சிக் நிலை ஏற்படும். இதனால் பசியின்மை, வாந்தி, தலைவலி, முடி உதிர்தல்,

தூக்கமின்மை என்பவை ஏறபடும்.இந்த சின்னச் சின்னப் பிரச்சனைகளில் ஆரம்பமாகி அதிகப்படியான விற்றமின்கள் (Vitamins),  கல்லீரலிலே தங்குவதால், கல்லீரல் செயல்பாட்டையே பாதித்துவிடும்.

மேலும், எலும்புகளைக் கடினமடையச் செய்து சாதாரண கை, கால் அசைவின் போது கூட வலியை ஏற்படுத்தக்கூடும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள்  கட்டாயம்  மருத்துவரின் பரிந்துரைப்படியே விற்றமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

விற்றமின் பி 

annaimadi.com,vitamins,benefits of vitamins,foods &vitamins,அன்னைமடி,விற்றமின்கள் அறிந்ததும் அறியாததும்,ஊட்டச்சத்துக்கள்

பி விற்றமின்களில் பலவகைகள் உள்ளன. இதில், பி12 மற்றும் பி9 (ஃபோலிக் ஆசிட்) இரண்டும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு மிக முக்கியமானவை.

இவற்றின் குறைபாட்டினால் ரத்த சோகை மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படலாம்.

இதைத் தடுக்க, முட்டை, இறைச்சி, சம்பா கோதுமை, முட்டைக்கோஸ், கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

விற்றமின் சி

நோய் எதிர்ப்பு சக்திக்கு விற்றமின் சி அவசியம். இந்தச் சத்து குறைந்தால், ஸ்கர்வி என்னும் பல் பாதிப்பு ஏற்படும்.

சிட்ரஸ் வகைகளான ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி மற்றும் பப்பாளி, கீரை வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பாதிப்புகளைத் தடுக்கலாம்.

விற்றமின் இ

annaimadi.com,vitamins,benefits of vitamins,foods &vitamins,அன்னைமடி,விற்றமின்கள் அறிந்ததும் அறியாததும்,ஊட்டச்சத்துக்கள்

இப்போது கடைகளில் கிடைக்கும் காஸ்மெட்டிக் பொருட்கள் பலவற்றிலும் விற்ற மின் இ (Vitamin E) நிறைந்திருக்கிறது. இன்றைய இளம் பெண்கள், முகப்பரு பிரச்சனை வந்தால் தாங்களாகவே விற்றமின் இ மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.

இது நல்லதல்ல. விற்றமின் இ அளவு அதிகமாகும்போது, ரத்த இழப்பு பாதிப்பு ஏற்படலாம். பெண்கள் மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுக்கக் கூடாது.

விற்றமின் டி (Vitamin D)

annaimadi.com,vitamins,benefits of vitamins,foods &vitamins,அன்னைமடி,விற்றமின்கள் அறிந்ததும் அறியாததும்,ஊட்டச்சத்துக்கள்

எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கல்சியம் சத்தினை உடல் உறிஞ்சிக்கொள்ள விற்றமின் டி மிக முக்கியம். ஆனால் இது அதிகமாகும் போது, சிறுநீரகத்தில் படிந்து, கற்களை உண்டாக்கி விடும்.

இதனால் அடிவயிற்றில் வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, கடைசியில் சிறுநீரகமே செயலிழக்க நேரிடும்.

விற்றமின் கே

annaimadi.com,vitamins,benefits of vitamins,foods &vitamins,அன்னைமடி,விற்றமின்கள் அறிந்ததும் அறியாததும்,ஊட்டச்சத்துக்கள்

ரத்தம் உறைதலுக்கு இந்த விற்றமின் ரொம்பவும் தேவை. ஆனால், இது உடலில் அதிகமாகும்போது ‘ஹைப்பர் த்ராம்போனீமியா’ என்ற பாதிப்பு ஏற்படுவதால் அளவுக்கதிகமாக ரத்தம் உறைந்து ரத்தக் கட்டிகளை உண்டாக்கிவிடும்.

இந்த ரத்தக் கட்டிகள், நம் ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளுக்கக்ச் செல்லும்போது மூளை மற்றும் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்திவிடும்.

இதனால் திடீர் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *