கொழுப்பைக் கரைக்க சில வழிமுறைகள் (Ways to dissolve fat)
உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளால் உடல் பருமன் போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டி இருக்கிறது. உடற்பருமன் சர்க்கரை, இதய நோய்கள் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.இதனால் உடம்பில் தேவை இல்லாமல் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க (Ways to dissolve fat) வேண்டியது முக்கியமாகிறது.
கொழுப்புகளைக் குறைப்பதற்கு, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் சின்ன சீரகம் ,பூண்டு, வெங்காயம் ஆகியவை உதவுகின்றன. இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சீரகதண்ணீர் குடிக்கலாம். இதனால், விரைவிலேயே உடலில் உள்ள கொழுப்புக் குறைந்து, உடல் அழகான வடிவம்பெறும். சுரைக்காய், புடலங்காய்,வெள்ளரிக்காய் ,வாழைதண்டு போன்ற நீர்த் தன்மையான காய்கள் உடம்பில் உள்ள கெட்டநீரை அகற்ற (Ways to dissolve fat) உதவுகின்றன. அதோடு வயிற்றுச்சதையைக் குறைப்பதில் சுரைக்காய் அதிகளவில் உதவுகிறது. அதனால், சுரைக்காயை ,குழம்பு,பால்க்கறி,அல்லது பருப்புடன் சேர்த்து கூட்டு என ஏதோ ஒரு முறையில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.
கொழுப்பை கரைக்க விரும்புபவர்களுக்கு , இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க எளிய சிறந்த வழிமுறை வீடியோவில் !!
பார்த்து,பின்பற்றி பயன் பெறுங்கள்.
வாழைத்தண்டு சாறு ,அரும்கம்புல் சாறும் போன்றவையும் உடல் எடையைக் குறைக்கிறது.
காலையில் நடைப்பயிற்சி, ஒழுங்கான உடற்பயிற்சி மேற்கொள்வதும் உடல் எடையைசரியான அளவில் வைத்திருக்க உதவும்.
இஞ்சியை தோல் சீவி சாறெடுத்து அதனுடன் சிறிது ஏலக்காய், 1 கப்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
அது அரைக்கப் அளவுக்கு சுண்டும் வரை கொதிக்க விடவும். இது உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து அகற்றும்.
புளித்த உணவு என்றாலே நமக்கு தயிர் நினைவுக்கு வரும். தயிர் (Yogurt) வயிற்றுக்கு மிகவும் நல்லது. அதேபோன்று வெங்காயம், முட்டைகோஸ் போன்ற சில காய்கறிகளும் வினிகரில் ஊறவைக்கப்பட்டு புரோஃபயாடிக் உணவுகள் கிடைக்கின்றன. இந்த புளிக்க வைக்கப்பட்ட புரோ ஃபயோடிக் உணவுகள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்குவதைத் தடுக்கிறது.
உடலில் கொழுப்புச்சத்து சேராமல் இருப்பதற்குக் கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பது அர்த்தமல்ல. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று இருவகை உண்டு.
ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் இயக்கமும் சீராக இருக்கும்.
மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லை. வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும் என்றாலும் கூட, இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது.