மரணத்தின் பின் நிகழ்வது என்ன? (After death)

மரணத்தைப் பற்றிச் சிந்தித்து,மரணத்தின் பின் என்ன நிகழ்கின்றது, (After death) என பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

ஏனெனில் பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் இறந்தேயாக வேண்டும். இறப்பு நிச்சயமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

இளம் வயதினர் தாம் இப்போதைக்கு இறந்து விடப் போவதில்லை என்ற உள்ளுணர்வு தரும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வயோதிகர்களோ மரணம் பற்றிய சிந்தனைகள் துன்பகரமானவை என்று நினைத்து அவ்வெண்ணங்களை மனதில் வளரவிடுவதேயில்லை.

மரணத்தின் பின் என்ன நிகழ்கின்றது? என்பது நமக்குப் புரிபடாமல் இருப்பதால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக உள்ளது.

ஆன்மீகத்தில் மரணத்தின் பின் (After death in spirituality

‘ஆன்மா என்றும் அழியவே அழியாது. அழிவு என்பது நம் உடலுக்கு மட்டும்தான். நம்முடைய வினைகளின் காரணமாகவே நமக்குப் பிறவி ஏற்படுகின்றது. மரணம் சம்பவித்து வினைப் பயன் முடிந்ததும் ஆத்மாவானது அந்த  உடலை விட்டு வெளியேறுகிறது.

எடுத்த பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப மறுபடியும் அந்த ஆத்மா ஒரு பிறவி எடுக்கிறது’ என கூறப்பட்டிருக்கின்றது.ஆனால் 

அறிவியலில் மரணத்தின் பின் (After death in science

மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ, செய்யும் வினைகளுக்கு ஏற்ற சொர்க்கம், நரகம் என்பதோ கிடையாது. மூளை செயலுடன் இருக்கும் வரைதான் நினைவுகள் மற்றும் செயல்கள் யாவுமே.

மூளை செயல் இழந்தால் உடலும் அழியும். அதோடு நினைவுகளும் செத்துப் போகின்றன.

எனவே, மரணத்துக்குப் பின் வாழ்க்கை இல்லை. அதுபற்றி சொல்லப்படும் கருத்துகளும் கட்டுக்கதையே என்றுதான் இதுவரை அறிவியல் சார்ந்த aறிஞர்கள் சொல்லி வந்தனர்.

சமீபத்திய ஆராய்ச்சிகளில்

ஜெர்மனைச் சேர்ந்த மனநிலை ஆய்வாளர்கள், மருத்துவர்கள் இணைந்த குழு ஒன்று மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்துக்குப் பின் வாழ்க்கை உள்ளது. மூளை தனது செயலை இழந்தாலும் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது என்பதைக் கண்டறிந்து நிரூபித்தனர்.

இந்த ஆய்வை, பல்வேறு வகைகளில் மரணம் அடைந்தவர்களின் மரணத் தறுவாயில் அவர்களுடன் இருந்து  அவதானித்து இருக்கிறார்கள்.

மரணம் சம்பவிக்கும் நேரத்தில் அவர்களுக்கு நேரிட்ட அனுபவங்களை நவீன ரக அறிவியல் சாதனங்களின் உதவியுடன் கண்டறிந்திருக்கின்றனர். அப்போது  இறந்துபோன உடலின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர்.

அவை பொதுவாக,

  • உடலிலிருந்து உயிர் பிரிவது போன்ற நினைவுகள்
  • தெய்வீக ஆற்றலால் ஆட்கொள்ளப்பட்டு மிதத்தல் போன்ற உணர்வு
  • ஒளியில் ஜொலிக்கும் ஆற்றல்
  • அமைதி நிலை
  • சூடான பாதுகாப்பு

மரண வேளையின் அனுபவம் எனப் பல்வேறு உணர்வுகளாக பகிரப்பட்டுள்ளன.

எமது மரணத்தின் (After death) பின் எமது மனைவி மக்கள் வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் சில ஒழுங்குகளை முற்கூட்டியே செய்து வைத்துவிடுகிறோம்.

ஆனால் நாம் இறந்தபின் எமது ஆன்மாவின் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

சிறிதளவேனும் என்ன நடக்கின்றது என்பதை அறிய முயற்சிப்போமா??  வாருங்கள்.

1944-ம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற உளவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டில் தனக்கு ஏற்பட்ட  மாரடைப்பும் அப்போது உருவான அசாதாரண சூழல் பற்றியும் எழுதியுள்ளார்.

அதில் அவரின் உயிர் , உடலை விட்டுபிரிந்து சென்றதாகவும், இந்த பூமியை சில மைல்கள் தொலைவில் மேலே இருந்து கண்டதாகவும் கூறி வியந்துள்ளார்.

அண்டசராசரத்தில் பார்த்த விண்வெளிக் காட்சிகள் யாவும் பின்னர் விண்வெளி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது உண்மை.

மருத்துவர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975-ம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற நூல்தான் உலக அளவில் மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை குறித்து பல ஆய்வுகளை மேற்கொள்ள செய்தது.

150 பேரிடம் இவர் மேற்கொண்ட ஆய்வுகள் 9 விதமான உணர்வுகளை அவர்கள் அனுபவித்ததை கூறியது.

டாக்டர் ப்ரூஸ் க்ரேசன், டாக்டர் பிம் வான் லோம்மெல், டாக்டர் மைக்கேல் சாபொம் போன்ற மேதைகளும் பின்னாளில் ஆய்வுகள் செய்து டாக்டர் ரேமண்ட் மூடி கூறியவை உண்மை என அறிவித்தனர்.

ஆச்சரியமாக அந்த 9 வகை உணர்வுகளும் ஏறக்குறைய இந்து புராணங்கள் கூறியவை தான்!

மரண வேளையின் அனுபவம் Near-death experience

  • ரீங்கார ஒளியைக் கண்டு பரவசம்

  • உடலை விட்டு உயிர் பிரிதல்

  • விண்வெளியில் ஆன்மா தங்குதல்

  • சுரங்கவழிப்பயணம்

  • ஒளிமிக்க சிலரை தரிசித்தல்

  • பிரமாண்ட ஜோதியைக் காணல்

  • கடந்த வாழ்க்கையை பரிசீலித்தல்

  • வாழ்க்கை முடிவடைந்து போகவில்லை என்று உணர்தல்

என அப்படியே ரேமண்ட் மூடி அவர்களின் ஆய்வுகள் நமது புராணங்களைப் பிரதிபலித்தது.

பற்றற்று வாழும் துறவிகளுக்கும், “எல்லாம் அவன் செயல்” என்று இறைவனடியில் சரணடைந்துவிட்ட பக்திமான்களுக்கும் மரணபயம் இருப்பதில்லை.

மரணம் என்னும் மர்மம் பயங்கரமானது என்ற எண்ணம் மனிதர்களிடையே இருப்பதால் தான் “உங்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால்” என்று சுற்றிவளைத்துச் சொல்கிறோமேயொழிய “நீங்கள் இறந்துவிட்டால்” என்று வெளிப்படையாகக் கூறுவதில்லை.

பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை !அறிவியலில் மரணத்தின் பின் ,After death in science,மரணத்தின் பின் நிகழ்வது என்ன?,ஆன்மீகத்தில் மரணத்தின் பின்,After death in spirituality,annaimadi.com,அன்னைமடி ,மரண வேளையின் அனுபவம் Near-death experience

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *