பாதம் சொல்வது என்ன? (What the foot says)
உங்கள் பாதங்கள் என்ன சொல்கின்றது (What the foot says) ?
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் நம்மை பற்றிய ரகசியங்களையும், நம் எதிர்காலத்தைப் பற்றிய குறிப்புகளையும் உள்ளடக்கியதுதான். கண்கள் நம்முடைய ஆன்மாவை வெளிப்படுத்தும் ஜன்னலாக இருக்கின்றது. நமது கைரேகை என்பது நமது விதியை வெளிப்படுத்தும் ஜன்னலாக இருக்கிறது. அது போல நமது பாதங்களும் (What the foot says) நம் வாழ்க்கை பாதையைக் குறிப்பதில் முக்கியப்பங்கை வகிக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.
பண்டைய களங்களில் இருந்தே எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அதில் இருக்கும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்கும் மக்கள் கைரேகையை படிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.
அதேபோல கைரேகை மட்டுமின்றி உங்கள் பாதத்தின் வடிவமும் (What the foot says) உங்களின் எதிர்காலத்தைப் பற்றி பலவற்றைக் கூறுகிறது.
கடவுளின் படைப்பையும் எதிர்காலத்தை கணிப்பதற்கான வழியையும் புரிந்து கொள்ள முனிவர்கள் தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிட்டார்கள். அப்படி அவர்களின் ஞானத்தின் மூலம் உருவானதுதான் சாமுத்ரிகா சாஸ்திரம் ஆகும்.

அடிப்படையில் சாமுத்ரிகா சாஸ்திரம் (Samudrika Shastra) என்பது உடல் அம்சங்களைப் பற்றிய அறிவாகும்.ஒரு நபரின் கால்கள் அவர்களின் விதி, ஆளுமை, கடந்த கால மற்றும் எதிர்காலம், இயல்பு ஆகியவற்றைப் பற்றி வெளிப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
உங்கள் பாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது (What the foot says) என்பதை தெரிந்து கொள்ள முதலில் அதனை நன்கு சுத்தம் செய்து கழுவி ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும்.
காலின் தடிமனான சுட்டு விரல் அல்லது மெலிதான சுண்டு விரல் நீண்ட ஆயுள் மற்றும் செல்வத்தின் அடையாளமாகும்.
ஒருவருக்கு இந்த இரண்டுமே இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும், குறைவிலா செல்வத்தையும் கொண்டிருப்பார்கள் என்று சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது.

கட்டை விரல் மற்றும் சுட்டு விரலுக்கு இடையே உள்ள இடைவெளி மற்றதை விட சிறியதாக இருந்தால்,அது போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை குறிக்கிறது.
சுட்டு விரல்,கட்டை விரலை விட பெரியதாக இருந்தால் அவர்கள் சீரற்ற, மூர்க்கத்தனமான காதல் வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
கட்டை விரலும், சுட்டு விரலும் ஒரே நீளத்தில் இருந்தால் அவர்கள் ஆரோக்கியமான காதல் வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.