பளிச்சென்ற முகத்திற்கு (bright and white face)

எல்லோருக்கும் தமது சரும நிறத்தில் மிகுந்த அக்கறை உண்டு. சருமம்  பளிச்சென்று வெள்ளையாக (bright and white face) இருக்க அனைவருமே விரும்புவோம்.

இயற்கையான பொருட்களை பாவிப்பதால்  உங்கள் சருமத்திற்கு சிறந்தது.எதிர் விளைவுகள் இல்லை.

முகம் அழகாக பளிச்சென்று தோற்றமளிக்கும்.

சருமம் அழகாகவும் பளிச்சென்றும் ஆக 

  • ஒவ்வொரு இரண்டு மணி நேரம் இடைவெளியில்  உங்கள் முகத்தை சாதாரண நீரால் கழுவவும், இது உங்கள் சருமத்தின் பளபளப்பைத் தக்கவைக்க உதவுகிறது.
  • வெளியில் சென்று வந்தால் அவசியம்  முகத்தை சாதாரண நீரால் கழுவவும்.
  • தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும், இது சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது.  உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை  அடிக்கடி முகத்திற்கு( face mask) பயன்படுத்தலாம்.ஒரு நல்ல ப்ளீச்(bleach) ஆக செயற்படும்.இந்த அழகுகுறிப்பை தினமும் பயன்படுத்துங்கள். முகம் நல்ல பளிச்சென்று (bright and white face) இருக்கும்.
  • எலுமிச்சை சாற்றில் 1 ஸ்பூன் சர்க்கரை  சேர்த்து கலக்கவும். உங்கள் முகத்திலும், உடலிலும் பூசி சிறிது நேரத்தில் கழுவவும்.
  • ஒரு முட்டையின் வெள்ளை கருவை தேனுடன் கலந்து, முகத்தில் பூசவும்.20 நிமிடங்கலின் பின்  கழுவி கொள்ளவும். இது சருமத்தை இறுக்கமடைய செய்யும்.
  • 1 ஸ்பூன் பாலுடன் மாம்பழக் கூழ் கலந்து முகத்தில் தடவலாம்.
  • ரோஸ் வாட்டருடன் “முல்தானி மெட்டி” கலந்து வாரத்திற்கு ஒரிரு முறை முகத்தில்  தடவவும்.இது உங்கள் சருமத்திலிலுள்ள அழுக்கு , தூசியை அகற்ற உதவுகிறது.
  • உங்கள் சருமத்தை வெண்மையாக்க  காய்ச்சாத பசும்பால் மட்டும்  போதும்.சருமத்திற்கு மிகவும் நல்லது.

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு  செய்யப்படும் இந்த குறிப்பையும் பாருங்கள்.

இவற்றுடன் நல்ல உணவும் இருக்க வேண்டும். முக்கியமாக பச்சை காய்கறிகள், சாலட், பழங்கள் தினமும் உண்ணுங்கள்.

தொடர்ந்து இப்படி செய்து வர, மென்மையான, பிரகாசமான ஒளிரும் முகம் ( bright and white face) உங்களுக்கு சொந்தமாகும்!

இதற்கென தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு கடைகளிலும் இது போல் இயற்கையான பொருட்களாலானவை (natural facelift for a beautiful and glowing face) கிடைக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *