பற்களை வெண்மையாக பளிச்சிட செய்யும் பழங்கள்(White teeth)

பற்களில் உள்ள கறைரைகளைப் போக்கி பற்களை வெண்மையாக பளிச்சிட (White teeth) செய்ய சில  பழங்கள் உதவுகின்றன.

முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் பற்கள் முக்கிய பங்காற்றுகிறது.

ஏனெனில் புன்னகை மிக்க முகத்தைப் பார்க்கவே பலரும் விரும்புவார்கள். அப்படி ஒருவர் புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது அழகையே பாழாக்கும். இன்று நாம் சாப்பிடும் பல உணவுகள் பற்களின் ஆரோக்கியத்தையும், நிறத்தையும் பாதிக்கின்றன.

இதனால் பலரது பற்கள் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது.

 எப்போது பற்களின் எனாமல் தேய்கிறதோ, அப்போது பற்களின் இரண்டாம் அடுக்கான மஞ்சள் நிற டென்டின் தெரிகிறது.

இயற்கை வழிகளில் பற்களை வெண்மையாக்க (White teeth naturally)

குறிப்பாக சில பழங்களை உண்பதன் மூலம், மஞ்சள் நிற கறைகள் அகன்று பற்கள் வெண்மையாக பளிச்சிடும். அதோடு பழங்கள் பல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.

பற்களில் கறை அதிகம் இருந்தால் இந்த பழங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிட்டு வர, பற் கறைகளைப் போக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, பற்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குறிப்பாக வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம், கல்சியம் மற்றும் மாங்கனீசு போன்றவை பற்களில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, மஞ்சள் கறைகளையும் போக்கி, வெண்மையாக்கும் (White teeth). 

ஸ்ட்ராபெர்ரி

Fruits that make teeth whiter,பற்களை வெண்மையாக பளிச்சிட செய்யும் பழங்கள்,Teeth shine white,பற்கள் வெண்மையாக பிரகாசிக்க,White teeth,annaimadi.com,அன்னைமடி,To get rid of yellow teeth,பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க, பற்களின் கறையைப் போக்க ,To remove stains from teeth,To Remove Yellow Stains In Teeth In Tamil,To Remove Yellow Stains , benefits of Fruits,fruits safe teeth, ஸ்ட்ராபெர்ரி பற்களுக்கு இரண்டு நன்மைகளை வழங்கும். தினமும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு வந்தால், அது பற்களை உள்ளிருந்து வலுவாக்கும்.

மற்றொன்று ஸ்ட்ராபெர்ரி பழத்தைக் கொண்டு பற்களைத் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு மட்டுமின்றி, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளும் நீங்கும். ஏனெனில் இதில் மாலிக் அமிலம் உள்ளது.

இது பற்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. மேலும் பல்வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, ஆப்பிளில் உள்ள இந்த அமிலம் வாயில் அதிகப்படியான எச்சில் சுரக்க உதவி புரிந்து, அதன் விளைவாக பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி வெண்மையாக்குகின்றது(White teeth).

ஆரஞ்சு

ஆரஞ்சு பலரும் வைட்டமின் சி குறைபாட்டைக் கொண்டுள்ளனர். இச்சத்து குறைபாட்டினால் ஈறுகளில் இரத்தம் கசியும். இதை இப்படியே புறக்கணித்தால், அது வாயில் பையோரியாவிற்கு வழிவகுக்கும்.

இம்மாதிரியான சூழ்நிலையில் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாடு நீங்கும். அதே வேளையில் இப்பழத்தைக் கொண்டு பற்களைத் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று மின்னும்.

 கிரான்பெர்ரி

Fruits that make teeth whiter,பற்களை வெண்மையாக பளிச்சிட செய்யும் பழங்கள்,Teeth shine white,பற்கள் வெண்மையாக பிரகாசிக்க,White teeth,annaimadi.com,அன்னைமடி,To get rid of yellow teeth,பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க, பற்களின் கறையைப் போக்க ,To remove stains from teeth,To Remove Yellow Stains In Teeth In Tamil,To Remove Yellow Stains , benefits of Fruits,fruits safe teeth,

கிரான்பெர்ரி பழம் வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்க உதவும். இது தவிர, இப்பழமானது பற்கள் சொத்தையாவதை தடுக்கும் மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்பலாமல் செய்யும்.

தர்பூசணி

தர்பூசணியிலும் மாலிக் அமிலம் உள்ளது. மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்கும் மற்றும் வாயில் எச்சில் சுரப்பை அதிகரிக்கும்.இதில் மாலிக் அமிலம் ஸ்ட்ராபெர்ரியை விட அதிகமாக உள்ளது.

தர்பூசணியை சாப்பிடுவதோடு, அதைக் கொண்டு பற்களில் தேய்ப்பதன் மூலமும் பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கலாம். 

அன்னாசி

அன்னாசி இயற்கையாகவே துகள்களை கரைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

அதே வேளையில் உணவுகளில் உள்ள நிறமியையும் உறிஞ்சுகிறது. இதனால் பற்களில் நிறமாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க அன்னாசியை தினமும் சாப்பிட வேண்டும்.  

 பப்பாளி

Fruits that make teeth whiter,பற்களை வெண்மையாக பளிச்சிட செய்யும் பழங்கள்,Teeth shine white,பற்கள் வெண்மையாக பிரகாசிக்க,White teeth,annaimadi.com,அன்னைமடி,To get rid of yellow teeth,பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க, பற்களின் கறையைப் போக்க ,To remove stains from teeth,To Remove Yellow Stains In Teeth In Tamil,To Remove Yellow Stains , benefits of Fruits,fruits safe teeth,

பப்பாளியில் அன்னாசியைப் போன்றே நொதி பொருள் உள்ளது. அந்த நொதியின் பெயர் பாப்பைன். இது பெல்லிகல் லேயரை சிதைக்கும் புரதத்தை உடைக்க உதவுகிறது.

இதன் விளைவாக, பற்களில் உள்ள கறைகள் அகற்றப்பட்டு, பற்களில் பிளேக்கிற்கு எதிராக ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாகிறது. எனவே பப்பாளி சாப்பிட மறவாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *