பெண்களின் உடல் எதனால் பருமனாகிறது? (Why do women become obese)

ஆரோக்கியமான உணவு,சரியான உணவு முறை,  உடல் வியர்க்கும் படியான உடற்பயிற்சி போன்றவற்றை சரிவர செய்யாததாலேயே  (Why do women become obese) அதிக பெண்கள் பருமனாகின்றார்கள்.

ஆண்களை போல், எடையை தாங்கும் பயிற்சிகளை அதிகமான பெண்கள் மேற்கொள்ளவதில்லை. இதனால் அவர்களுக்கு  தசைத்திசுக்களின் அடர்த்தி குறைவாக இருக்கும்.

ஒருவர்  எடையை தாங்கும் எந்தப்பயிற்சியையும் மேற்கொள்ளாமல் இருப்பின், அவருக்கு தசைத் திசுக்கள் குறைவாக இருக்கும்.அதாவது அவை கலோரிகளை எரிக்கும் ஆற்றலை இழந்திருக்கும். அதனால், அவர்களது எடை அதிகரிக்குமென மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

பொரித்த உணவுகள், அதிக இனிப்புள்ள உணவுகள்,செயற்கை நிறங்கள் சேர்த்த உணவுகள், கிரீம் சேர்த்த உணவுகள், துரித உணவுகள் போன்றவை  உடலைப் பருமனாக்கும்  (Why do women become obese) முக்கிய உணவுகள்.

loose weight,Why do women become ,annaimadi.com,over weight,no proper exercise,weight loss,eating habbits,fast foods

சரியான உணவு உண்ணும் முறை

உணவை நன்றாக அரைத்து, கூழாக்கி  பின் விழுங்க வேண்டும்.

சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் முக்கியம். காலையில் தூங்கி எழுந்த 2 மணி நேரத்துக்குள் காலை உணவையும், மதியம் 12 முதல் 1 மணிக்குள் மதிய உணவையும், இரவு 8 மணிக்குள் இரவு உணவையும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.

இரவு உணவு உண்ட பின்குறைந்தது   2 மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது மிக நல்லது. உணவு சரியாக செரிமானம் அடைய நேரம் கொடுக்கலாம்.

weight loss,eating habbits,fast foods,diet control,over weight,food measuring cups for weight loss,diet controlCheck price

அதிக பருமனானவர்கள் உணவை அளந்து சாப்பிடுங்கள்.அதற்கு அளவு கப்புகள் (food measuring cups) அல்லது எடை  அளக்கும் மெஷின் (Weight scale) பயன்படுத்தலாம்.

2 கப் காய்கறியுடன், ஒரு கப் பருப்பு சாப்பிடுங்கள். குறைந்த ஸ்டார்ச் சத்துள்ள உணவுகள்,காய்கறிகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

Why do women become ,annaimadi.com,over weight,no proper exercise,weight loss,eating habbits,fast foods,diet control

சரியான உணவு

உணவில் நார்ச்சத்து தவறாமல் இடம் பெறட்டும். காய்கறி, பழங்கள் மட்டுமன்றி, ஓட்ஸ் தவிடு, கோதுமைத் தவிடு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முழு தானியங்கள், சிறு தானியங்கள், சிவப்பரிசி, அவல் போன்றவற்றை உணவுக்குப் பிறகும் தொடரும் பசியின் போது சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு,கரட், பீட்ரூட், மஞ்சள் பூசணி, ஸ்வீட் கோர்ன் போன்றவற்றை உங்கள் உணவில் குறைத்துக் கொள்ளுங்கள்.

பாதாம், வால்நட், அவகடோ போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புசத்து கிடைக்கும்.

எண்ணெய் பயன்படுத்துவதையும் குறையுங்கள்.

பெண்களின் எடை அதிகரிப்பை எப்படி தடுக்கலாம்

மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹோர்மோன்களின் சுரப்பு குறைவதே பெண்களின் எடை அதிகரிப்பிற்கு காரணம். பெண்கள் எடையை தாங்கும் எந்த பயிற்சியையும் செய்யாதிருந்தால் ,

தசைத்திசுக்களின்  அடர்த்தியில் குறைவு ஏற்பட்டு ,எலும்புமுறிவு ஏற்படும் அபாயமும் அதிகம். எனவே தசைத்திசுக்களின் அடர்த்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மருத்துவர்களிடம்  ஆலோசனையாக  பெறலாம்.

ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் ஒரு டம்ளர் மோர், பழச்சாறு அருந்துங்கள். அது நீங்கள் சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்கும்.

எந்த உணவை சாப்பிடும் போதும் அதில் புரதம் , நார்ச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் புரதமும் நார்ச்சத்தும் வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசியை கட்டுப்படுத்தும்.

ஒடியல்,புளுக்கொடியல்,தேங்காய்,காய்கள்,பழங்களில்  அதிக நார்ச்சத்து உள்ளது.

தவிர தினசரி உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புசக்தியைப் பெற , விற்றமின் மற்றும் தாதுச்சத்துகள் சேரும்படியும் உணவுகளை உண்ணுங்கள். உணவில் நார்ச்சத்து தவறாமல் இடம்பெறட்டும். காய்கறி, பழங்கள் மட்டுமன்றி, ஓட்ஸ் தவிடு, கோதுமைத் தவிடு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *