திடீர் மாரடைப்பு ஏன் ( Sudden heart attack?)

திடீர் மாரடைப்பு  ( Sudden Heart attack) என்பது, இருதயத்திற்கு செல்லக்கூடிய எலக்ட்ரிக்கல் சிஸ்டம் கெட்டுப்போவதால் ஏற்படுவது.இதன் போது  மிக வேகமாக அளவிட முடியாத துடிப்பு ( High heart beat rate ) ஏற்பட்டு, மூளைக்கு செல்லக்கூடிய ரத்த அளவு குறைகிறது. சுய நினைவை இழந்து மயக்கமடையும் நிலை உருவாகின்றது.

ஆனால், சாதாரண மாரடைப்பு (Heart attack) என்பது இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்களில் ஏதேனும் ஒன்றில் அல்லது மூன்றிலும் அடைப்பு ஏற்படுவது.

இதனால், இருதயத்திற்கு செல்லும் ரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜன் குறைந்து, சதைகள் கெட்டுப்போவதால் ஏற்படுகிறது.

ஆரம்ப காலங்களில்  70, 80 வயதுக்காரர்களுக்குத் தான் மாரடைப்பு வந்தது பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் ,அது  குறைந்து 60 ஆகி பின் 40 ஆகி தற்போது 20 – 25 வயதினருக்கும், திடீரென மாரடைப்பு ( Sudden heart attack) ஏற்படுகின்றது.

மாரடைப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. நவீன வாழ்க்கைமுறை,  ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள், சரியான உடற்பயிற்சி  இன்மை தான் இதற்கு  காரணம்.

எப்படி தடுப்பது?

உங்கள் உணவு முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்து திடீர் மாரடைப்பை தவிர்க்கலாம்  என்பதை  கீழேயுள்ள வீடியோவில் பாருங்கள்.

உண்மைதான், நவீன யுகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பல படிகள் முன்னேறி உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஆம்,ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தாலே போதும் எந்த வேலையையும் இருந்த இடத்தில் இருந்தே செய்து விடலாம்.

பக்கத்துத் வீட்டில்  வசிப்பவரைக் கூட நடந்து சென்று பார்த்து, பேசுவதை குறைத்துவிட்டோம். உணர்வுகள் எதுவாயினும் அதை சோஷியல் மீடியாவில் (Whatsap,Viber,Facebook,Intergram..) பகிர்ந்து விடுகின்றோம்.போதுமான நடைப்பயிற்சி ,அசைவுகள் இல்லை.

இதன்  விளைவாக , உடற்பருமன், அதீத உணர்வுகள், மனவெழுச்சி போன்றவற்றுக்குள் சிக்கிக்கொள்கிறோம். முன்னோர்கள் வகுத்துக்கொடுத்த  நல்வாழ்க்கைமுறையைத் தொலைத்துவிட்டோம். இதனால் பல  ஆபத்தான நோய்கள் தாக்கும் அபாயத்துக்குள் இருக்கின்றோம். அவற்றில் ஒன்று தான் மாரடைப்பு!

அல்லது திடீர் மாரடைப்பு ( Sudden heart attack)!!

மாரடைப்புக்கான அறிகுறிகள் எவை?

மாரடைப்பு  வருவதற்கான சாத்தியங்கள்  உள்ள ஒருவருக்கு பின்வரும்  அறிகுறிகள் தென்படலாம்.

  • நடக்கும்போது, படிக்கட்டுகளில் ஏறும் போது, உணர்ச்சிவசப்பட்டுப் பேசும்போது வலி ஏற்படலாம்
  • அதிகமான உணவு உட்கொண்ட பின்னர் நடக்கும்போதும் கூட வலி ஏற்படும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

சிலருக்கு சைலன்ட்டாக மாரடைப்பு வரலாம். இவர்களுக்கு வலி ஏற்படுவதே தெரியாது. இவர்கள் தோள்பட்டையில் வலியை உணரலாம்.

  • வாயுத் தொந்தரவு
  • மூச்சுத்திணறல்
  • படபடப்பு
  • சட்டென்று வியர்ப்பது  போன்றவை தென்பட்டால் அது மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

அவர்கள் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

40 வயதைக் கடந்துவிட்டவர்கள்  தவறாது  வைத்திய பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பிளட் சுகர், கொலஸ்ட்ரால், எக்ஸ்ரே, இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.

சாதாரண மாரடைப்பை சுலபமாகக் கண்டுபிடித்து காப்பாற்றிவிடலாம்.ஆனால், திடீர் மாரடைப்பை உடனடியாக கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *