ஓமத்தின் மகத்துவம் (Wonder herbal for indigestion)
ஓமத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால், உணவானது எளிதில் ஜீரணிக்கும் (Wonder herbal for indigestion). பசியைத் தூண்டி, வயிறு சம்மந்தமான அனைத்து கோளாறுகள் நீக்கும் சிறந்த தன்மையை ஓமம் கொண்டுள்ளது.
நன்கு பசி எடுத்து, நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்குவதே ஒரு மனிதன் ஆரோக்கியத்திற்கு அடையாளம். இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் நோய்கள் நிரந்தரமாக நமது உடலில் தங்கிவிடும்.
இவற்றிற்கு ஓமம் (Carom seeds) சிறந்த நிவாரணி.
ஓமம் (Ajvain) குழந்தை மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. முக்கியமாக ,பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான நோய்களுக்கு (Omam water) அடிக்கடி ஓமத்தண்ணி (Wonder herbal for indigestion) கொடுப்பார்கள்.
ஓமம் (Oregano) கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும். வாயுவை அகற்றும்.உடலில் உள்ள கழிவுகளை அகற்றும்.வெப்பம் உண்டாக்கும்.உடலை பலமாக்கும். உமிழ் நீரைப் பெருக்கும்.
ஓமத்தின் மருத்துவ பயன்களை வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளலாம்.
ஓமத்தில் மருத்துவம்
சீதளத்தால் ஏற்படும் ஜுரம், சளி, இருமல், வயிறு சம்மந்தமான நோய்கள், குடல் இரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள் போன்றவை ஓமம் மூலம் சரி செய்ய முடியும்.
பசி உண்டாகாமல் இருப்பவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மேசைக்கரண்டி ஓமத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால் பசியின்மை நீங்கும்.
அதோடு தினம் ஓமத்தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் வராது என்று கூறப்படுகிறது.
வயிற்றுக் கோளாறு நீங்க
ஓமத்தையும் சீரகத்தையும் தீயாதபடி வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தினமும் சாப்பிட்டு 20 நிமிடங்களின் பின் ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிறு கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
வயிற்றில் ஏதாவது கோளாறு இருந்தாலும் , வயிற்றில் அடிக்கடி சத்தம் வந்தாலும்இதை செய்யலாம்.
ஜீரண சக்தி நன்கு அதிகரிக்கவும்,நன்றாக பசி எடுக்கவும்
கொத்தமல்லி சாற்றில் ஓமம் மற்றும் பெருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, சாப்பிடுவதற்கு முன்பு தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டவும்.
ஜலதோஷம், மூக்கடைப்பு,சளி நீங்க
ஜலதோஷம், மூக்கடைப்பு போன்றவற்றை விரட்டவும் ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓம பொடியை ஒரு துணியில் கட்டி அதை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
அதே போல ஓமப்பொடியை உச்சந்தலையில் தேய்த்தால் ஜலதோஷம் பறந்தோடும்.
ஓமத்தை இலேசாக வறுத்து, இடித்துத்தூள் செய்து கொள்ள வேண்டும். 5 கிராம் அளவு தூளுடன், சிறிது பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். அவற்றை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து கட்டவும். பச்சைக் கற்பூரப் பொடியுடன் ஓமபொடி நன்கு கலக்குமளவிற்கு நசுக்கவும். துணிமுடிச்சை,மூக்கால் நுகர சளி ஒழுகுதல், மூக்கடைப்பு ஆகியவை குணமாகும்.
ஓமத்திற்கு ஒரு வித சிறப்பு வாய்ந்த நறுமணம் உண்டு. .நறுமணம் கொண்ட ஓமத்தை நாண்,பூரி,ஓமபொடி செய்யும் பொது அதிகம் பயன்படுத்துவார்கள்.
ஓமம், சுக்கு, கடுக்காய்த் தோல் இவற்றைச் சம அளவாக எடுத்து, நன்கு தூளாக்கி வைக்கவும். அதில் ½ தேக்கரண்டி அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வாயு உபாதை குணமாகும்.
ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்பு போலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.
ஓமத்தைச் சிறிது நீர்விட்டு அரைத்து, பசைபோலச் செய்து, வயிற்றின்மீது பற்றுப் போட வயிற்றுவலி குணமாகும்.
ஓமம்,மிளகு,வெல்லம் மூன்றிலும் சம அளவு எடுத்து, பொடியாக்கி வைக்கவும்.காலை,மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு, வேளைக்கு 1/2 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிக்கழிச்சல் ஆகியவை தீரும்.