தேங்காயின் தெரியாத அற்புதம் ( Wonderful coconut)

தேங்காயில் ( Wonderful coconut)  புரதச்சத்து, மாவுச்சத்து, கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் உள்ளன.

 • தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது.
 • தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
 • தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்.
 • கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது.
Wonderful coconut,benefits of coconut
 • தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.உதாரணத்திற்கு பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு.
 • மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்குக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.
 • வெள்ளைபடுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
 • தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
 • தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
 • மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்தில் இருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
 •  தேங்காய் ( Wonderful coconut) எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன.

நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

Wonderful coconut,benefits of coconut oil
 • எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது தேங்காய் எண்ணெய் . குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.
 • தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.
 • தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
 • தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு அதாவது அல்சர் (Ulcer) தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது.உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
 • தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.தேங்காய் ( Wonderful coconut) எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச்சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.
 • முற்றிய தேங்காயிலுள்ள வைட்டமின் இ (vitamin E)  தைராய்டு(Thyroid) சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
Wonderful coconut,benefits of coconut milk

 

Leave a Reply

Your email address will not be published.