எந்த நோய்க்கு எந்த ஆசனம்?(Yoga & disease)

யோகாசனம் (Yoga & disease) நம்முடைய வாழ்வில் நோய்களை வராமல் தடுக்கும். பிராணாயாமமும், தியானமும் மன அழுத்தத்தை விரட்டும் ஆற்றல் படைத்தது.

இன்றைக்கு மனிதன் சந்திக்கும் ஸ்ட்ரெஸ் முதல் இதய நோய் வரையிலான ஆறு மிக முக்கியமான பாதிப்புகளை யோகா எப்படி சரி செய்கிறது என்று பார்ப்போம்.

பிராணாயாமமும், தியானமும் (Yoga & disease)

பொதுவாக உடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் எழும்போது உடல் புத்துணர்வோடு உடல்நலக்குறைவு தரும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகள், உறவுகள், நட்புகளால் ஏற்படும் மன அழுத்தம் அளவில்லாமல் உள்ளது.

அதிக மன அழுத்தம் நம்மை முற்றிலும் கொல்லும் பேராபத்து உண்டுபண்ணக் கூடியது.

பிராணாயாமமும், தியானமும் மன அழுத்தத்தை விரட்டும் ஆற்றல் படைத்தது. மூச்சு பயிற்சி எடுத்தால் மன அழுத்தம் தானாகவே குறைந்து, மனம் அமைதியடையும்.

செய்யும் வேலைகளில் கவனமும் இருக்கும். பல எண்ணங்கள் மனதுக்குள் அலைமோதுவதால் தான் மன அழுத்தம் வருகிறது. மூச்சுப்பயிற்சி செய்யச்செய்ய, நம்மை தொந்தரவு செய்யும் தேவையற்ற எண்ணங்கள் விலக ஆரம்பிக்கும்.

ரத்தக்கொதிப்பை தடுக்கும் மூச்சுப்பயிற்சி நமது இதயம் எப்படி இளமையாக உள்ளது? இதய ஆரோக்கியத்தை அளக்கும் கருவி என்று கூட இரத்த அழுத்தத்தை சொல்ல முடியும்.

தியானம், பிராணாயாமத்தின் ஒரு பகுதியான நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலையும், மனதையும் சீராக்கி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.

முதுகுவலி நீக்கும் மார்ஜாரி ஆசனம் (Yoga & disease)

முதுகுவலிக்கு பை பை சொல்லும் மார்ஜாரி ஆசனம் கழுத்திலிருந்து கீழ்பாகம் வரை நம் உடலின் எல்லா பகுதிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இறுக்கமாக இருக்கும் போது தான் முதுகுவலி வருகிறது.

இரு சக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்துவது, கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் வேலைப் பார்ப்பது ஆகியவை முதுகு வலிக்கு காரணங்களாக அமைகிறது.

மார்ஜாரி ஆசனத்தின் மூலம் முதுகெலும்பின் இறுக்கத்தைக் குறைத்து, முதுகுவலியை விரட்ட முடியும்.

கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்தும் இராஜ கபோடாசனம்

சர்க்கரைநோயை கட்டுப்படுத்தும் ஆசனங்கள்

இந்தியாவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெறத்தொடங்கி உள்ளது. வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் சரியாக செயல்படாத போது இன்சுலின் சுரப்பு குறைந்து, சர்க்கரை நோய் உருவாகிறது.

யோகாசனத்தின் மூலம் கணையத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைத்து இன்சுலின் சுரப்பை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வர முடியும். பஸ்சிமோத்தாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், ஹாலாசனம் ஆகிய பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால் நீரிழிவிலிருந்து விலகி வாழலாம்.யோகா ஆசனம் Yoga Asana ,அன்னைமடி,annaimadi.com,கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்தும் இராஜ கபோடாசனம்,இதயத்துக்கு நலம் தரும்  சர்வாங்காசனம்,பிராணாயாமமும், தியானமும்,சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்  ஆசனங்கள்,சிறுநீரகம் காக்கும் தனுராசனம்,முதுகுவலி நீக்கும் மார்ஜாரி ஆசனம்,Raja Kapodasana for strengthening leg muscles and joints, Sarvangasana for heart health, Pranayama and Dhyana, Asanas for controlling diabetes, Dhanurasana for kidney protection, Marjari Asana for back pain relief,எந்த நோய்க்கு எந்த ஆசனம் Yoga asana & disease

சிறுநீரகம் காக்கும் தனுராசனம்

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களின் காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.

உணவில் உப்பைக் குறைப்பது, தண்ணீர் நிறைய குடிப்பது போன்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில எளிய மாற்றங்களுடன் சலபாசனம், தனுராசனம் போன்ற ஆசனங்களை செய்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

உட்டியாணா என்ற வயிற்றுக்காக செய்யப்படும் பயிற்சியும் அரைமணிநேரம் தவறாமல் செய்து வந்தால் நல்ல பலனை உணரலாம்.யோகா ஆசனம் Yoga Asana ,அன்னைமடி,annaimadi.com,கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்தும் இராஜ கபோடாசனம்,இதயத்துக்கு நலம் தரும்  சர்வாங்காசனம்,பிராணாயாமமும், தியானமும்,சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்  ஆசனங்கள்,சிறுநீரகம் காக்கும் தனுராசனம்,முதுகுவலி நீக்கும் மார்ஜாரி ஆசனம்,Raja Kapodasana for strengthening leg muscles and joints, Sarvangasana for heart health, Pranayama and Dhyana, Asanas for controlling diabetes, Dhanurasana for kidney protection, Marjari Asana for back pain relief,எந்த நோய்க்கு எந்த ஆசனம் Yoga asana & disease

இதயத்துக்கு நலம் தரும் சர்வாங்காசனம்

விலங்குகளுக்கு இதய நோய் வருவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். 4 கால்களில் நிற்பதால் முதுகு மேலேயும் அதற்குக் கீழே இதயமும் இருக்கிறது.

ஆனால், நாம் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதால் கீழிருந்து அதிக அழுத்தத்துடன் ரத்தம் மேலே ஏறுகிறது. இதனால் இதயத்துக்கு வேலைப்பளு அதிகமாகிறது.

இதுவே மனிதர்களுக்கு இதய நோய் வர காரணங்களில் ஒன்று என்றும் சொல்கிறார்கள். முதுகுத்தண்டு மேலேயும், இதயம் கீழேயும் வரும் சர்வாங்காசனம், விபரீத கரணி ஆகிய பயிற்சிகள் இதய நோய்களை நம் அருகில் நெருங்கவிடாமல் தடுக்கும்.

வயிற்றுத் தசைகளை பலப்படுத்தும் அர்த்த ஹலாசனம்

தீவிர முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்தல் நல்லது. முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது. . அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் வளர்கிறது. தன்மதிப்பு வளர்கிறது.தன்னம்பிக்கை வளர்கிறது.

முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது. வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது மலச்சிக்கலைப் போக்குகிறது.

தொப்பையை கரைக்கிறது. இடுப்புப் பகுதியை நெகிழ்வடையச் செய்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் காலத்து வலியைப் போக்குகிறது.

அடி முதுகு வலியைப் போக்குகிறது. வெரிகோஸ் வெயின் வலியைப் போக்குகிறது. தொடைப் பகுதியை உறுதியாக்குகிறது.

கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்தும் இராஜ கபோடாசனம்

முதுகுத் தசைகளை வலுவாக்குகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் அதன் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது.

முதுகுத் தசைகளை வலுவாக்குகிறது. முன்புற உடலை நன்கு நீட்சியடையச் செய்கிறது.

நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது.

இடுப்புப் பகுதியை நெகிழ்த்துகிறது வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. ஜுரணத்தைப் பலப்படுத்துகிறது.

கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுடன் கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.