நல்ல உறக்கத்தை தரும் யோகாசனங்கள் (Yoga for good sleep)
இரவில் தூங்குவதற்கு சிரமப்பட்டாலோ அல்லது ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ, நீங்கள் பயிற்சி செய்யக்கூடிய சில யோக ஆசனங்கள் (Yoga for good sleep) உள்ளது.
தூங்கச் செல்வதற்கு முன் செய்கிற இந்த ஆசனங்கள் (Yoga for good sleep), நிம்மதியான தூக்கத்துக்கும், மன அமைதிக்கும் உதவும். இந்த ஆசனங்களை செய்யும் முறைகளையும், அவற்றின் பலன்களையும் அறிந்து கொள்வோம்.
தூக்கமின்மை என்பது உள் உறுப்புகள் ஆரோக்கியமாக இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தும் அலாரம்
என்கிறது மருத்துவ உலகம்.
உடலுக்கான உணவைப் போலவே, உடல் அதன் உகந்த நிலையில் செயல்பட தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கம் குறைவான மன அழுத்த அளவையும், அமைதியான மனதையும், நல்ல ஆரோக்கியத்தையும் எளிதாக்குகிறது.
தலைவலி, உடல் வலி மாதிரி, தூக்கமின்மையும் தற்போது பரவலாக எல்லாரையும் பாதிக்கிற பிரச்சனையாக உள்ளது. மற்ற பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரைத் தேடி ஓடுகிற போதும் தூக்கமின்மை என்பது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஆபத்தான பிரச்சனை என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பலரது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள்.
தூக்கமின்மைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
நல்ல தூக்கம் பெற உதவும் ஆசனங்கள் (Yoga for good sleep)
தூக்கமின்மையை போக்க இலகுவான சில ஆசனங்கள் செய்து பலன் பெறுவோம்!
ஒவ்வொரு ஆசனத்தையும் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் அல்லது அதற்கு மேல் செய்யலாம். இதனை மூன்று முறை மீண்டும் செய்யவும். பின்னர் விரும்பியபடி படிப்படியாக 10-15 நிமிடங்களுக்கு அதிகரிக்கலாம்.
உடலில் குறைந்த அளவு விரியும் தன்மை உள்ள உடை அணிந்து கொள்ளவும். அமைதியான, தூய்மையான சூழல் இந்த ஆசனங்கள் செய்ய தேவை. தரையில் துணியோ, பாயோ விரிக்கவும்.
1. சுகாசனம் (Sugasana, Happy pose)
- தரையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள்
- இரு கால்களையும் நீட்டவும்
- கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகக் வைக்கவும்
- உள்ளங்கைகளை முழங்கால்களில் வைக்கவும்
- முதுகெலும்பை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்
2. வஜ்ராசனம் (Vajrasana)
- இந்த ஆசனத்தை உணவிற்கு பிறகு செய்யலாம்.
- முழங்கால்களை மடக்கி மெதுவாக அதன் மீது உட்காரவும்.
- இடுப்பை உங்கள் குதிகால் மீது வைக்கவும்.
- குதிகால் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
- முழங்கால் முட்டிகள் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும்.
- முதுகை நேராக்கி உட்காரவும்.
3. தியானம்(Meditation)
- இந்த நுட்பத்தை பயிற்சி செய்ய இயற்கை சூழலைக் கண்டறியவும்
- சுகாசனம் போன்ற வசதியான நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்
- 5 விநாடிகளுக்கு முன்புறத்தையும், மற்றொரு 5 விநாடிகளுக்கு பின்புறத்தையும், வலது மற்றும் இடது பக்கங்களில் தலா 5 விநாடிகளும் பாருங்கள்
- கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைவு கூருங்கள்.
4.சவாசனம்(Savasana)
சவாசனம் என்பது செத்த பிணம் போல் இருக்கும் யோக நிலை ஆகும். இந்த ஆசனம் மூலம் உடல் தணி
வடைதல், மன அமைதி என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியும்.
- விரிப்பில் மல்லாக்க படுக்கவும். தலை, விரிப்பின் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
- கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும்.
- தொடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும்.
- உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
- இப்போது நீங்கள் அமைதியான உறக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும்.
- உடல், மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்க வேண்டும்.
கிடைக்கும் பலன்கள்
இந்த யோகாசனங்கள் பல நன்மைகளைத தருகின்றன. இது உங்களிடம் அமைதியான உணர்வைத் தூண்டக்கூடும். இவை ஒரு நல்ல இரவு ஓய்வை அனுபவிக்க உதவுகின்றன.
மற்ற ஆசனங்களின் மூலம் விறைப்படையும் தசைகள் சவாசனத்தின் மூலம் தளர்வுறுகின்றன. எந்த யோகப் பயிற்சியின் போதும் இறுதியாக சவாசனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மனதையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம் தரும்.
நடுத்தர வயதினர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளைப் போக்க சவாசனம் பெரிதும் உதவும்.
சவாசனத்தை பகல் நேரத்தில் குறைந்த அளவு நேரம் செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.