கர்ப்பப்பையை காக்கும் ஆசனங்கள் (Yoga for protect the womb)
பாலாசனம்,புயங்காசனம்,பத்ராசானம் போன்ற சில இலகுவான யோகசனங்கள் கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க (Yoga for protect the womb)உதவுகின்றது.
இன்றைய நவீனயுகத்தில் இளம்பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), வெள்ளைப்பாடு (Leucorrhea) பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முகம் கொடுக்கிறார்கள்.
பெண்களுக்கான தனித்துவமான உடல் உறுப்பு கர்ப்பப்பை .உடல் உழைப்பின்மை,சரியான ஆரோக்கியமான உணவு பழக்கம் இன்மையால் கர்ப்பப்பையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுகிறது. இதனால் சீரற்ற மாதவிடாய் ஏற்படும். சிலருக்கு சீராக வராது.இன்னும் சிலருக்கு வந்தால் அதிகமான இரத்த போக்கு ஏற்படலாம். இந்நிலை தொடரும் போது குழந்தையின்மைக்கு வழிவகுக்கிறது.
பேரிக்காய்(Pears) வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.
எனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாதாரண நிலையில் நோய் இருக்கும் போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.
பாலாசனம் (Yoga for protect the womb)
புயங்காசனம் (Yoga for protect the womb)
செய்முறை
குப்புறப் படுத்து ஒரு கால்களையும் சேர்த்து இடுப்பு வரை விறைப்பாக வைத்து கொள்ளவும்.
இடுப்பிற்கு மேற்பாகமுள்ள வயறு,மார்பு,கழுத்து தலை முதலிய உறுப்புகளை பின்புறமாக மெதுவாக வளைத்து இரண்டு கைககளில் பொறுக்க நிற்கவும்.
பின்புறமாக வளையும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.திரும்பும் போது மூச்சை வெளியில் விட்டுக் கொண்டு வரவும்.