தைராய்டை குணமாக்கும் யோகாசனங்கள் (Yoga for Thyroid)

யோகப்பயிற்சிகள் (Yoga for Thyroid) தைராய்ட் சுரப்பியின் செயல்பாட்டை மட்டுமின்றி உடலிலுள்ள எல்லா பாகங்களின் செயல்திறனையும் திறம்பட செயல்பட வைக்கிறது.

தைராய்டு (thyroid) என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் பட்டர்பிளை வடிவத்தில் இருக்கும் நாளமில்லா சுரப்பி.இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான்.இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.இதனால் இதை அலட்சியப்படுத்தாமல் அப்பயிற்சியை (Yoga for Thyroid) மேற்கொண்டு நலம் பெறுவோம். 

இந்த ஹார்மோன் ரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

உடலில் அயோடின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்சனை வருகிறது.அனைவருக்கும் அயோடின் மிகமிக அவசியம். குறிப்பாக கர்ப்பமடைந்த பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் அயோடின் மிக முக்கியம்.

இதில் குறைந்த அளவே தைராய்டு ஹார்மோன் இருப்பது ஹைபோ தைராய்டிசம் என்றும், அதிக அளவு தைராய்டு ஹார்மோன் இருப்பது ஹைபர் தைராய்டிசம் என்று 2 வகைகள் உள்ளன.

ஆண்களை விட பெண்களையே இந்த நோய் அதிகம் தாக்குகிறது. அயோடின் சத்து மிகுதியாதல் மற்றும் குறைதல், தைராய்டு சுரப்பியின் வீக்கம், தொற்றுநோய் கிருமி, வைரஸ் கிருமி தாக்குதல், இதய கோளாறு, வலிப்பு போன்றவற்றுக்காக உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாலும் தைராய்டு குறைபாட்டு பாதிப்பு வரலாம்.

தைராய்டு நோய்க்கு உணவும் மருந்தும்

தைராய்டு நோய்க்கு பல்வேறு ஆங்கில மருந்துகள் இருந்தாலும், பக்க விளைவுகள் இல்லாத ஏராளமான சித்த மருந்துகளும் உள்ளன.

குறிப்பாக அமுக்ரா, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சிறுநாகப்பூ, கிராம்பு சேர்ந்த மருந்து, சுத்தி செய்த அன்னபேதி, நற்பவழம் சேர்ந்த மருந்து, கடுக் காய், நெல்லிக்காய், தான்தோன் றிக்காய் சேர்ந்த மருந்து, எண் ணற்ற வெளிச்சந்தை மருந்துகள் தைராய்டு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.

மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று சித்த மருந்துகளை உட்கொண்டு, தைராய்டு நோயில் இருந்து விடுபட லாம். 

தைராய்டுற்கான பொதுவான அறிகுறிகள் முடிஉதிர்வு, மலச்சிக்கல், மனக்குழப்பம், உடல் சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகளை கொண்டு தைராய்டு நோய்க்குரிய பரிசோதனை கண்டறிவதோடு முறையான சிகிச்சையும் எடுக்க வேண்டும்.

சிகிச்சையோடு உணவு முறையில் மாற்றங்களையும் உடற்பயிற்சியும் கூட இவற்றை வேகமாக குணப்படுத்தவே செய்யும். அந்த வகையில் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் யோகப்பயிற்சியும் (Yoga for Thyroid) உண்டு.

தைராய்டு பிரச்சனையை  சரி செய்யும்  யோகாசனங்கள் (Yoga for Thyroid)

யோகப்பயிற்சிகள் சுரப்பிகளின் செயல்களைச் சீராக்குகின்றன. இது தவிர உடலின் சக்தியை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைத்து, வளைவுத் தன்மையை அதிகரித்து தசை மற்றும் மூட்டின் இறுக்கத்தன்மையை குறைப்பதால் தைராய்டு பிரச்சினையின் பாதிப்புகளை சமாளிக்க முடிகிறது.

புஜங்காசனம்

விரிப்பில் குப்புறப்படுத்துகொள்ளவும். கால்கள் இரண்டும் ஒன்றாக தரையில் நேராக இருக்க வேண்டும். கைகளை காதுக்கு நேராக தரையை நோக்கி தோள்பட்டைக்கு சற்று கீழாக இருக்கும்படி வைத்து உள்ளங்கைகள் தரையில் ஊன்றி இருக்க வேண்டும்.

நெற்றி தரைவிரிப்பின் மீது படிந்து உடலை தளர்வாக வைக்க வேண்டும். கண்கள் மூடிய நிலையில் சில விநாடிகள் ஓய்வு எடுத்துகொண்டு உள்ளங்கைகளை மார்புக்கு நேராக ஊன்றி மூச்சை உள்ளிழுத்து தரையிலிருந்து நெஞ்சுபகுதியை உயர்த்தி வயிறு வரை மெல்ல உயர்த்தவும்.

மூச்சை வெளியே விட்டு முதுகையும் இயன்றவரை வளைக்க வேண்டும். அப்போது கைகளை வளைக்க கூடாது. பிறகு தலையை பின்நோக்கி சரித்து மேலே பார்க்கவேண்டும்.

அடிவயிறு பகுதியிலிருந்து கால்விரல்கள் வரை தரைவிரிப்பில் இருக்க வேண்டும். கண்கள் புருவத்தை பார்க்கவேண்டும்.

இந்த நிலையில் 20 முதல் 30 விநாடிகள் வரை இருந்து பிறகு மூச்சை வெளியே விட்டு உடலை தளர்வடைய செய்ய வேண்டும். புஜங்காசனம் தினமும்  2 முதல் 4 முறை வரை செய்யலாம்.

தனுராசனம்

விரிப்பில் கால்களை நீட்டியபடி குப்புறப்படுக்க வேண்டும். கைகள் இரண்டும் பக்கவாட்டில் இருக்க வேண்டும். பிறகு கால்களை பொறுமையாக மடக்கி இடது கையால் இடது கணுக்கால் பகுதியையும் வலது கையால் வலது கணுக்கால் பகுதியையும் பிடித்துகொள்ளவும்.

மார்பு பகுதி, கழுத்து, தலை பகுதியை மேல் தூக்கி வைக்கவும். இப்போது கைகள் கணுக்காலை பிடித்திருப்பதால் முதுகும் வளைந்து வில் போன்று இருக்கும்.

இந்த ஆசனம் செய்யும் போது வயிற்று பகுதி மட்டும் தரையில் நன்றாக அழுந்தியிருக்கும். மற்ற பகுதிகள் வில் போன்று வளைந்து இருக்கும்.

இந்த நிலையில் மூச்சை அடக்க வேண்டும். இயல்பாக இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 முதல் 30 விநாடிகள் வரை இருக்க வேண்டும்.

பிறகு மெதுவாக சாதாரண நிலையில் வந்து சில விநாடிகளுக்கு பிறகு மீண்டும் செயவேண்டும். தனுராசனத்தை 5 அல்லது 6 முறை செய்ய வேண்டும்.

ஹலாசனம்

விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்க வேண்டும். இரண்டு கைகளும் உடலோடு ஒட்டிய நிலையில் உள்ளங்கை தரையில் படும்படி வைக்க வேண்டும்.

கைகளை அழுத்தி கைகளுக்கு வலு கொடுத்து உடலை வளைக்காமல் இரண்டு கால்களையும் மேலே உயர்த்தவும்.

எவ்வளவு உயரம் தூக்க முடியுமோ தூக்கி பிடித்ததும் இரண்டு கைகளால் முதுகை பிடித்தபடி இரண்டு கால்களையும் தலைக்கு முன்னே கொண்டு வந்து தரையை தொடவேண்டும்.

கைகள் முதுகு பக்கமே நீட்டியிருக்க வேண்டும். பிறகு சாதாரண நிலைக்கு வரவேண்டும்.

முதல் முறை செய்யும் போதே கால்களை முன்னுக்கு கொண்டுவருவது சிரமமாக இருக்கும். தினமும் பயிற்சி செய்வதன் மூலம் இவை சாத்தியமாகும்.

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் யோகா பயிற்சி நிபுணர்களோடு கலந்து இதை தொடர்ந்து செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

சர்வாங்காசனம்(Yoga for Thyroid)

விரிப்பில் மல்லாந்து நிமிர்ந்து படுத்த நிலையில் உடலை தளர செய்யவும் பிறகு இரண்டு கால்களையும் மெதுவாக மேலே செங்குத்தாக உயர்த்தவும்.

ஆரம்பத்தில் செய்யும் போது சுவரை ஒட்டி கால்களை செங்குத்தாக வைக்கவும். பிறகு உடலை நேராக கொண்டு வந்து இடுப்பு பகுதிக்கும் சுவருக்கு இடைவெளி இல்லாதவாறு வைக்கவும்.

இரண்டு கால்களும் சுவரின்மீது இருக்கும். கைகளை முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து இடுப்பு பகுதியை உயர்த்தவும். கைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கால்கள் சுவரிலேயே இருக்க வேண்டும். உள்ளங்கைகள் நடுமுதுகில் வைக்கும் போது கால்கள் செங்குத்தாக நேர்க்கோட்டில் நிறுத்தி கண்கள் கால்களின் கட்டை விரலை பார்க்கும்படி செய்ய வேண்டும்.

முகத்தின் கீழ்த்தாடைபகுதி நெஞ்டில் ஒட்டியிருக்க வேண்டும். கழுத்து பகுதி தரையை ஒட்டி இடுக்கும். அந்த ஆசனம் செய்யும் போது சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும்.

இதனால் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கர்ப்பபபை உபாதைகளும் இருக்காது. தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *