சர்க்கரைநோயை போக்கும் யோகமுத்திரைகள் (Yoga mudras to cure diabetes)

யோகாவில் ஒரு சிறப்பு அம்சம் முத்திரைகள்.கை விரல்களால் நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதே முத்திரைகள்(Yoga mudras to cure diabetes).

நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல்  உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலிலும் பஞ்ச பூதங்கள் அடங்கி உள்ளது. நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.

  • கட்டைவிரல் – தீ
  • ஆள்காட்டி விரல் – காற்று
  • நடுவிரல் – ஆகாயம்
  • மோதிரவிரல் – நிலம்
  • சுண்டுவிரல் – நீர்.

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும்  அதிகரிக்கும்.

நாம் ஆரோக்கியமாக பிறந்ததோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவே வாழ வேண்டும்  மற்றும் ஆரோக்கியமாகவே மரணிக்க வேண்டும்.

ஆரோக்கிய வாழ்வென்பது நூறு ஆண்டுகள் வாழ்வது அல்ல. மாறாக வாழ்கிற வரைக்கும் நோய்களில்லாமல் சுகமாக வாழ்வது. அதுவே ஆனந்தமான பெருவாழ்வாகும்.

இதற்கு யோகா சனங்கள் ,யோகமுத்திரைகள் மருந்தில்லா மருத்துவ முறைகள் பெரும் துணையாக விளங்கும் என்பது உறுதி.

வருன முத்திரை(Yoga mudras to cure diabetes)

சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல பலேன் தரும்.
அன்னைமடி,யோகமுத்திரைகள், சர்க்கரைநோயை போக்கும் யோகாசன முத்திரைகள்,annaimadi.com,yogamudras to cure diabetes,yoga mudras,varuna mudra,prithvi mudra,piraana mudra,

சுமண முத்திரை(Yoga mudras to cure diabetes)

விரிப்பில் அமர்ந்து கொண்டு மார்புக்கு முன்பாக இருகைகளின் புறப்பகுதிகளை ஒன்றோடோன்று தொடுமாறு வைக்கவும். கட்டைவிரல் ஆள்காட்டி விரலுடன் சேர்த்து வைக்கவும். மற்ற நான்கு விரல்கள் ஒன்றோடோன்று தொடவேண்டும். மூன்று வேளைகள் 20 நிமிடம் என 45 நாட்கள் செய்ய வேண்டும்.
 
இந்த முத்திரையை அமர்ந்து கொண்டும் செய்யலாம். நின்று கொண்டும் செய்யலாம்.
சர்க்கரை நோயால் நரம்புகள், கல்லீரல், கணையம், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் பாதிப்படையும். சுமண முத்திரை, சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்க உதவும். மன அமைதி ஏற்படும். புத்துணர்வு ஏற்படும்.
அன்னைமடி,யோகமுத்திரைகள், சர்க்கரைநோயை போக்கும் யோகாசன முத்திரைகள்,annaimadi.com,yogamudras to cure diabetes,yoga mudras,varuna mudra,prithvi mudra,piraana mudra,

பிராண முத்திரை(Yoga mudras to cure diabetes)

மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
இது களைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும். பார்வைத் திறனை அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும்.
அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
அன்னைமடி,யோகமுத்திரைகள், சர்க்கரைநோயை போக்கும் யோகாசன முத்திரைகள்,annaimadi.com,yogamudras to cure diabetes,yoga mudras,varuna mudra,prithvi mudra,piraana mudra,

அபான முத்திரை

நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றும்.
 
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி யோகமுத்திரைகளை செய்வதோடு, கூடவே  என்ன சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? என்ற உணவு முறைகளின் தெளிவின் மூலம் சர்க்கரை நோய் மட்டுமல்ல, அனைத்து நோய்களிலிருந்தும் நாம் விடுதலை பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *