ஐம்புலன்களை கட்டுப்படுத்தும் யோகமுத்திரைகள்(Yoga mudras to control the senses)
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே.
இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன.
இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.
பெரு விரல் = சூரியன்
ஆட்காட்டி விரல் = காற்று
நடுவிரல் = ஆகாயம் (வானம்)
மோதிர விரல் = மண்
சுண்டு விரல் = நீர்
தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள்.
மூச்சை உள்ளேயும் வெளியேயும் நன்கு இழுத்து விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ உச்சரிக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை .
யோக முத்திரைகள் (Yoga mudras) செய்வதற்கு அறிந்துகொள்ள வேண்டியவை
விரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அவை யோக முத்திரை எனப்படும்.
இந்த முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்குமாம்.
முத்திரைகளை (Yoga mudras) எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம்.
படுத்த நிலையில் ,நடந்தவாறு , உட்கார்ந்த நிலையில் என முத்திரைகளை (Yoga mudras) எந்த நிலையிலும் செய்யலாம். ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது.
அது முடியவில்லை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் நல்லது .சம்மணம் போட முடியாதவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம்.
30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது.
30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்) முத்திரை செய்தால் சிறப்பு .
முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்.

யோகமுத்திரைகளை தொடர்ந்து இம்முத்திரையை செய்து வந்தால் (Yoga mudras)
இந்த முத்திரையை (Yoga mudras) தொடர்ந்து செய்துவருபவர்களுக்கு முதுகுத்தண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது.
இளமை ஏற்படுகின்றது.
முதுகுத்தண்டு வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் பலம் பெறுகின்றன.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும் .
இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுத்துவதால் நீடித்த மலச்சிக்கல் நீங்குகிறது.
யோகமுத்திரைகள் (Yoga mudras) செய்யும்முறை
பத்மாசனத்தில் அமரவும்.இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிகால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக்கொள்ளவும். அல்லது கைகளை பின்புறமாக மூடிக்கொண்டும் செய்யலாம்.
நிமிர்ந்து நேரே உட்காரவும்.
சுவாசப்பை நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும்.இப்போது மூச்சை விட்டுக்கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும்.
இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும்.பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இதை தொடர்ந்து 3 முதல் 7 முறை செய்யலாம்.
இந்த ஆசனம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் செய்வது அவ்வளவு எளிது அல்ல. சிலருக்கு என்ன செய்தாலும் பத்மாசனம் போடவே வராது.
அவர்கள் பத்மாசனம் சரியாக வரும் வரையில் சாதாரணமாக சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.
பலன்கள்
மலச்சிக்கல் நீங்கும். முதுகுத்தண்டில் இறுக்கம் நீங்கி முதுகுவலி போன்றவை வராது. முகத்தில் பொலிவும்,தேஜசும் ஏற்படுகிறது.
நாளடைவில் வயிறு(தொப்பை), இடுப்பு சதை மற்றும் தொடை பகுதிகள் குறைந்து அழகுடன் இருக்கும்.
இப்பகுதியில் இருக்கும் நரம்புகள் இறுக்கம் பெறும். இதனால் இந்தஆசனம் எளிதில் செய்து மூக்கை வைத்து தரையை தொடலாம்.
கழிவு முத்திரை
கட்டைவிரலின் நுனிப்பகுதியால் மோதிரவிரலின் கீழ் அதாவது மூன்றாவது ரேகை உள்ள இடத்தை தொடவும். மெல்லிய அழுத்தம் போதுமானது.
சம்மணம், பத்மாசனம், சித்தாசனம் இந்தநிலையில் சுவாசத்தை சாதாரணமாக நிலையில் வைத்து அதை கவனித்து வரவேண்டும்.
தினமும் ஒரு நிமிடங்கள் செய்யும்போது 15 நாட்களில் அல்லது அதற்கு முன்பாகவே உடலின் கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும்.
அப்போது சிறுநீர் அதிகம்போவது, அதில் வாடை வீசுவது, மலம் அதிக வாடையுடன் அடிக்கடிபோவது, கறுத்துமலம் வெளியேறுவது, வியர்வை அதிகம் வெளியேறுவது, அதில் வாடை வீசுவது, பேதி உண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம்.
பின்பு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.