இரத்த அழுத்தத்தை சீராக்கும் யோகா (Yoga to regulate blood pressure)
நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும் போது, ஆபத்து நிறைந்த நோய்கள் உருவாக வழிவகுக்கும். இரத்த அழுத்தம் இவ்வகையான ஆபத்தான நோய்களில் ஒன்று.
சாதாரண விடயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது (Yoga to regulate blood pressure)?
யோகாசனப பயிற்சிகளை அன்றாடம் நேரம் ஒதுக்கி செய்து வர மிக சிறந்த பலனைப் பெறுவீர்கள். யோகாசனம் கோபம், படபடப்பு, பதடட்டம் போன்றவற்றில் இருந்து உள்ளுறுப்புகளுக்கு நல்ல அமைதியைத் தரும்.தெளிவான மனநிலையைக் கொடுக்கும்.இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் சரியாக ஓடும்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும் மிக தெளிவான யோகா (Yoga to regulate blood pressure) பயிற்சிகளை வீடியோவில் காண்போம்.
இவற்றோடு தினமும் சில மணி நேரம் நடைப்பயிற்சி (Working) அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யும் பழக்கத்தைஉருவாக்க வேண்டும்.உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.உடல் எடை அதிகமாக் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். முதலில் உங்கள் உடல் எடை உயரத்துக்கு ஏற்றது தானா என்பதை சோதித்து சரி செய்யவும்.
இரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டுடன் சீரான உடற்பயிற்சியும்செய்ய வேண்டும்.
40 வயதுக்கு மேல் தான் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் என்ற காலம் மாறி, இப்போது 25 வயதினருக்கே திடீர் மாரடைப்பு (Heart attack) வந்து பயமுறுத்துகிறது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தம் தான்.
ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும் போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது.
மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னை தான்.
வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.
குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹோர்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது.
ரத்த அழுத்தம் ஏற்படக் காரணம்
- சிறு வயதில் உடலை வருத்தி வேலை,உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது
- அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வது
- துரித உணவுகளால் உடலில் சேரும் கொழுப்பு
- தவறான உணவு முறை
- அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு
- மது மற்றும் போதைப் பழக்கங்கள்,
- அதிக உடல் எடை
- அதிக அளவு மாமிசங்களை உண்பது.
போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன.
சீரற்ற ரத்த அழுத்தத்தால் உண்டாகும் நோய்கள்
- ரத்த அழுத்தம் வந்தால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரலாம்.
- மூளை பாதிக்கப்பட்டு பக்க வாதம் வரலாம்.
- கண் பார்வை இழக்க நேரிடலாம்.
- சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.