யோகா தரும் அற்புத மாற்றங்கள் (Yoga brings amazing transformations)
யோகத்தில் (Yoga) வரும் ஆசனங்கள். உடலை ஆரோக்கியமடையச் செய்கின்றன. பிராணாயாமம் மூச்சை ஒழுங்குபடுத்தி நீண்ட ஆயுளை அடைய செய்கின்றது.
நம் உடல், மூச்சு, மனம் இம்மூன்றின் சேர்க்கையே உயிர் வாழ்க்கையாகிறது. உடல், மூச்சு, மனம் ஆகிய மூன்றில் எது பாதித்தாலும் அது மற்றவற்றை பாதித்து விடுகிறது.
இம்மூன்றையும் சீர்படுத்த ஹடயோகம் (Yoga) உதவுகிறது. பழங்கால பயிற்சி முறையான ஹடயோகம் பாரத நாட்டு யோகிகளால் உபதேசிக்கப்பட்ட உடல், மூச்சு, மனம் மற்றும் ஆன்மா சம்பந்தமான ஓர் அற்புத விஞ்ஞானமாகும்.
முத்திரைகள் குறிப்பிட்ட நாடி, நரம்புகளில் பிராஹ சக்தியை (மின்காந்த சக்தியை) செலுத்த உதவுகின்றன.
வந்தங்கள் குறிப்பிட்ட நாடிகளில் பிராண சக்தியை நிலை நிறுத்தவும், ஷட்கர்மா உடலின் உள் உறுப்புகளை தூய்மைப்படுத்துகின்றன.
தியானம் மனதை தூய்மைப்படுத்தவும், தனது நிஜவடிவான இறை தன்மையை அறியவும் உதவுகிறது.
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தான் செல்லும் பாதைகளில் வெற்றியடைய நல்ல உடல், மன ஆரோக்கியம் அவசியமாகிறது.
நோய்களும் யோகாவும் (Diseases and Yoga)
தினமும் யோகப்பயிற்சி (Yoga) செய்வதால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வருகிறது. அதாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை, மற்றும் நோய் முற்றுவது ஆகியவை குறைகின்றன. நோய் அறிகுறிகளும் படிப்படியாகக் குறைந்து விடுகின்றன.
மன அழுத்தம் வேகமாகக் குறைவதால் இன்சுலின் நன்கு வேலை செய்கிறது. மேலும் அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகளும் குறைவதால் இன்சுலின் செயல்பாட்டில் முன்னேற்றம் கிடைக்கிறது. மன அழுத்தம் குறைந்து மன அளவில் சமநிலை ஏற்படுவதால், ஒருவரின் நடத்தை நிலையிலும் மாற்றம் தெரிகிறது. ஆசனப் பயிற்சிகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளின் போது வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிவதால், கணையம் இன்சுலினை சுரப்பது அதிகமாகிறது.
பயிற்சிகளின் போது தசைநார்கள் அதிக அளவில் குளுகோஸை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதுடன், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவையும் வேகமாகக் குறைகிறது.
கணையத்தின் சுரப்பு தானியங்கி நரம்பு மண்டலங்களால் நிர்வகிக்கப்படுகிறது.
யோகப் பயிற்சிகள் தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமநிலைப்படுத்துவதால் நோயை நிர்வகிப்பது எளிதாகிறது. உடலில் உள்ள 5 பிராண சக்திகளில் வியானப் பிராணாவும் ஒன்று.
யோகப் பயிற்சிகள் காரணமாக வியானப் பிராணாவின் இயக்கம் சீராகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் காயம் ஏற்படும்போது இந்த சீரான இயக்கம் காரணமாக காயங்கள் விரைவில் குணமடைகின்றன!