உன்னால் முடியும்! (You can)

”என்னால் இது முடியுமா..?”

’முடியாது என்பதை முடியும் (You can)’’ என்று சிலர் நிகழ்த்திக் காட்டிடக் காரணம் அந்த செயல் நிச்சயமாக நிகழும் என்பதை அவர்கள் மனதளவில் முழுமையாக நம்பி, அனுபவித்துப் பார்ப்பதால் தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்திப் பயணித்தால், அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனைக் கொண்டு போய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

ஆனால் மற்றவர்கள் அவர்கள் சென்ற ஆழமான நினைவுகளுக்கு, கற்பனைகளுக்கு, முயற்சிகளுக்குச் செல்லத் தயாராக இல்லாததே அதை முடியாது என்று சொல்லக் காரணம் ஆகிறது.

டிஸ்னி லேண்ட் திட்டத்தை வால்ட் டிஸ்னி வெளியிட்ட போது இது கற்பனைத் திட்டம் என்றும், இது படுதோல்வி அடையும் என்றும் பல பேர் கிண்டல் செய்தார்கள்.

ஆனால் அதை உருவாக்கிய போது உலகமே வியக்கும் அற்புதமாக அது உருவானது.

உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பு இடாதீர்கள்.

என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சம் அடையாதீர்கள்.

தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது.

போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?

இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

முயன்றால் உங்களால் முடியும்!(You can)

 

 

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டு போய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர்.

தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; ஆனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.

பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள்.

அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும்.

“இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்.

 வாழ்க்கை ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள்
தீயவற்றைக் கழித்துக் கொள்
அறிவைப் பெருக்கிக் கொள்
நேரத்தை வகுத்துக் கொள்
வெற்றி, தோல்வியை சமமாக கொள்

வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது?

தோல்வியை எப்படி தோற்கடிப்பது? என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன.

நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள்.

“எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்றவர்கள் உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும்.

முயன்றால் உங்களால் முடியும்,You can,annaimadi.com,அன்னைமடி,உன்னால் முடியும் 

தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது.

விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும்.

உங்களுக்கு தேவை நம்பிக்கை. என்னால் செய்து முடிக்க முடியும் என்ற நினைப்பு.இந்த நினைப்பில்  நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

உங்களிடம் என்னென்ன திறமைகள் உள்ளன என்பதை கண்டுபிடியுங்கள்.அது சிறிய திறமையாக கூட இருக்கலாம்.

பெரிய திறமை சிறிய திறமை என்று எண்ணி விடாமல் ,அதை எவ்வளவு சிறப்பாக செய்ய முடிகிறது என்பது தான் கவனிக்க வேண்டியது.

துயரங்களைத் தாங்கிக் கொண்டு தான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள்.

உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்(You can)?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்? என்று எண்ணி துணிந்து செயற்படுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *