இளவயதில் முடி நரைப்பதை தடுக்க (Solutions for Young age gray hair)

முதுமை பருவ  அழகின் அடையாளமான  நரை, தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால்  இளம் பருவத்தினருக்கு இளநரை ( Young age gray hair) வருவது சாதாரணமாகி விட்டது.

ஆரோக்கியமற்ற  உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு,அசுத்தமான காற்று, மன அழுத்தம், அதிக டென்சன், முறையற்ற தூக்கம், பரம்பரை, ரத்த சோகை, ஹார்மோன் கோளாறுகள், போன்றவற்றால் இளநரை வருவது அதிகரித்து வருகிறது.

இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டால்  ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை ஏற்பட்டு , மனதில் மகிழ்ச்சியற்ற  நிலை உருவாகிறது.

இளநரை தோன்றுவதற்கான காரணங்களை  முதலில் தெரிந்து கொண்டால், இளநரை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை  கண்டறியலாம்.

இளநரை ஏற்படுவதற்கான காரணம் (Young age gray hair)

அனைத்துத் தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது இளநரைக்கு முக்கியமான காரணம்.

இதனால் , தலைமுடிக்கு போதிய  ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் இளநரை, முடி உதிர்வு ,தலைமுடி வளர்ச்சி  குறைவு போன்றவை ஏற்படலாம்.

அன்னைமடி,இளநரையை தடுக்க ,Solutions for Young age gray hair,annaimadi.com,grey hair at young age,graying hair at young age,causes & solutions for young age grey hair,preventing grey hair,why grey hair in young age,annaimadi.com

ஏனெனில் தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.

சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும் அல்லது நரை ஏற்படும்.

வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். இதனால் இளநரையை உண்டாக்குகிறது.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது உடலில் உள்ள தலைமுடிக்கு நிறத்தை உண்டாகும் நொதிகள் மீது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது.

இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நம்மால் தீர்வு ஏதும் செய்யமுடியாது. பரம்பரையின் காரணமாக இளமையிலேயே தலைமுடி நரைத்தவர்கள் சிலராய் பார்த்த்ஹடிருப்பீர்கள்.

இளநரை ஏற்படுவதை எப்படி தடுக்கலாம் (Young age gray hair)

குறிப்பாக விற்றமின் பி12 ( Vitamin B12) சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது.உணவில் போதுமான அளவு விற்றமின் பி12 எடுத்துக் கொள்ள வேண்டும்.    

இரும்புச் சத்து, புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள இளநரை தடுக்கப்படும்.
 
தலைக்கு சிகைக்காயும் வெந்தயம், அரப்பும் தேசிக்காயும், பாசிப்பயறு மா, செம்பருத்தி இலை, முட்டை போன்ற இயற்கை பொருட்களை பாவித்து வரலாம். இடையிடையே  வீரியம் குறைந்த ஷாம்பூகளை (Mild Shampoo) பயன்படுத்தலாம். அன்னைமடி,இளநரையை தடுக்க, Solutions for Young age gray hair,annaimadi.com,grey hair at young age,graying hair at young age,causes & solutions for young age grey hair,preventing grey hair,why grey hair in young age,annaimadi.com
நெல்லிக்காய் இளநரைக்கு மிக நல்லதொரு மூலிகை. நெல்லிக்காய் ஜூஸ்,நெல்லிக்காய் துவையல், சாதம் , நெல்லிக்காய் இனிப்பு போன்றவற்றை சாப்பிட்டு வரலாம்.
நெல்லிக்காய் எண்ணெய்  தலைக்கு பூசி வரலாம். நெல்லிக்காயை அரைத்து (amla powder) தலைக்கு பாவிக்கலாம்.
 

மீண்டும் தலைமுடியை கறுப்பாக்க என்ன செய்யலாம்

நரை வந்தபின் அவதிப்படுவதைவிட, அதை வரவிடாமல் தடுப்பது எளிது. உங்கள் சாப்பாட்டில் அதிக சத்துக்கள் நிறைந்த இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
விட்டமின் கே சத்து இல்லாமல் இருந்தால் இளநரை வரலாம். இந்த சத்தைப் பெறத்தான் பலரும் கறிவேப்பிலையை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளச்  சொல்வார்கள்.

தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது.

தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம்.

முடியின் நிறம் பிறப்பின் போதே நிர்ணயிக்கப்பட்டுவிடும்.நம் முடியின் வேர்ப்பகுதியின் உறை ஒன்று அடியில் இருக்கும்.

இங்கே மெலானோசைட்ஸ் என்கிற செல்கள் தங்கியுள்ளன. இவைதான் நம் முடிக்கு நிறமளிக்கு “மெலானின்’ என்ற நிறமியை உற்பத்தி செய்கின்றன. மெலானின் அளவுப்படிதான் நம் முடியின் நிறம் அமையும்.

அன்னைமடி,இளநரையை தடுக்க, Solutions for Young age gray hair,annaimadi.com,grey hair at young age,graying hair at young age,causes & solutions for young age grey hair,preventing grey hair,why grey hair in young age,annaimadi.com

தலைக்கு பயன்படுத்தும் சில ஷாம்புவில் இருக்கும் வீரியமிக்க இரசாயனப் பொருட்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்துகையில் முடியின் வேர்கால்களை சேதமடையச் செய்துவிடும்.
இதனால் மெலனின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நரைமுடி தோன்றுகிறது.
 
வயது ஆக ஆக இந்த “மெலானின்’ உற்பத்தி குறைந்து போகும். ஒரு கட்டத்தில் அது முற்றாக நின்றும்  போகலாம். அப்படி வயதின் காரணமாக “மெலானின்’ உற்பத்தி நின்று முடியின் நிறம் வெள்ளையாதால் இயற்கை.
 
நரை வந்தவுடனேயே பலரும் ஹேர் டை பயன்படுத்துவது நல்லதல்ல . அமோனியா அதிகமிருக்கும் ஹேர் டையினால் பல கெடுதல்கள் ஏற்படும். நரை முடியை பிடுங்குவதால், மெலனின் இல்லாத செல்களில் மற்ற முடிகளுக்கும் சிதறி நரையை அதிகப்படுத்துகிறது.
 
தொடர்ந்து தலைமுடிக்கு கலரிங் செய்யும்போது, தலைமுடி ஆரோக்கியம் இழந்து அதன் தரம் குறைகிறது. இதனால், தலைமுடி உதிர்வதுடன், உடைந்து போதல் ஏற்படுகிறது.
 
அதிலும் ரசாயனம் கலந்த கலரிங் செய்யும்போது, பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.
இளநரை வந்தபின்னர் அவதிப்படுவதை விட வராமல் தடுப்பதே சிறந்தது.
 
பீட்ரூட், நாவல்பழம், பீர்க்கங்காய், பாகற்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயப்பொடி, இஞ்சி, தேன், தயிர் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
டென்சன், கோபம்  ஆகாமல்  இருந்தால், தலைமுடி பிரச்சனை மட்டுமல்ல , உடலில் ஏற்படும் பல கோளாறுகளை தவிர்த்து ஆரோக்கியமாக  வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *