ஐம்பதிலும் இளமையாக இருக்க ( Young look in fifties )

வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள்.

ஆரோக்கியமான உணவு முறை, அதிக நீர் அருந்தும் பழக்கம், தியானம், யோகாசனம், சீரான  உடற்பயிற்சிகள், நல்ல உறக்கம் மூலம் ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதோடு இளமையுடனும் ( Young look in fifties ) அழகுடனும் சுறுசுறுப்பபாகவும் இருக்க முடியும்.

வயாதாகும் போது கூடுதலான கவனம் ஆரோக்கியத்தை பேணுவதிலும்  சரும அழகைப் பேணுவதிலும் காட்ட வேண்டும். அதே நேரம் வயதான தோற்றத்தைக் கொடுக்கும் விடயங்களை கண்டறிந்து அகற்றுதல் வேண்டும்.

How to be young in old age,annaimadi.com,young looking old person,to be young ever,Young look in old age

இளமை தோற்றத்திற்கான சரும அழகு குறிப்புகள் (Young look in fifties)

சோப்பின் பயன்பாடு
சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும்.

இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். பேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும்.

முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

மேக்-அப் போடும் முறை
மேக்-அப் போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர்,

அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். இதனால், மேக்-அப் நீண்ட நேரம் கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

ஆரோக்கியமான கூந்தல் பெற
இளமையாக தோற்றமளிக்க, கூந்தலின், பளபளப்பு மற்றும் மென்மையான தன்மை நீடித்திருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியம். கூந்தலை ஷாம்பு கொண்டு அலசிய பின், நுனியில் மட்டும் கண்டிஷனர் அப்ளை செய்யலாம்.

இதனால் கூந்தல், தலையோடு ஒட்டிக் கொள்வது தடுக்கப்படும். அதன் பின் ஹேர் டிரையர் பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கும் போது, சீப்பால் முடியைத் தூக்கி, ஹேர் டிரையரை சாய்வாக பிடித்தபடி உலர்த்த வேண்டும். இதனால், கூந்தல் நன்கு பளபளப்படைந்து இளமையான தோற்றத்தை அளிக்கும்.

மேலும், வெள்ளை முடி உடையவர்கள், ஹேர் கலரிங் மூலம் அவற்றை சரி செய்யலாம். நரை முடி இருப்பவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பட்ட வயதினரும் பேஷன் என்ற பெயரில் ஹேர் கலர் செய்து கொள்கின்றனர். இதனால், தற்போதைய பேஷனுக்கு ஏற்ப, விரும்பும் வண்ணத்தில் கூந்தலின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

How to be young in old age,annaimadi.com,young looking old person,to be young ever,Young look in old ageநீர்ச் சத்து குறைபாடு

முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள்.

குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.

இளமையான தோற்றத்திற்கான அழகு குறிப்புகள் (Young look in fifties)

கைகள் பராமரிப்பு
இளமையாக தோற்றமளிக்க முகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நில்லாமல், கைகளையும் கவனிக்க வேண்டும். கைகளில், சன்ஸ்கிரீன் லோஷன்கள் தடவலாம்.

அவற்றில் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு முறை கைகளை கழுவிய பின்னும், மாய்ச்சரைசர் தேய்க்க வேண்டும். இதனால், விரல்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

முதுமையிலும் இளமையாக தெரியனுமா ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடி. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர்.

நரையை மறைக்க டை உபயோகியுங்கள்… கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும். நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர். டை பயன்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

How to be young in old age,annaimadi.com,young looking old person,to be young ever,Young look in old age

கால்வெடிப்பு குணமாக

கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள்.

பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.

மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

கழுத்து சுருக்கம் போக்க

வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும்.

எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும்.

அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள்.

பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும். கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் .

அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

கன்னக் குழி தவிர்க்க

முதுமையில் கன்னங்களில் குழி விழுவது அ வயதான தோற்றத்தை அதிகரிக்கும்.

எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும்.

சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும்.

இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

தியானம் யோகா பயிற்சிகள்,நேர்மறை எண்ணங்கள்

உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன்.

நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்கியமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்…

கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக (Young look in fifties) மாறிவிடுவீர்கள்.

இசை , இயற்கையை ரசியுங்கள்

அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள்.

இதனால் மனதில் அமைதி சந்தோசம் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள்.அழுத்தங்கள் தானாகவே அகன்று விடும்.

அப்புறம் என்ன ஐம்பது வயதிலும்(Young look in fifties) அழகு ராணி நீங்கள்தான்.    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *