கைகால் ஏன் அடிக்கடி மரத்துப்போகிறது? (Your limbs often go numb)
இரத்த ஓட்டம் தடைபடும் காரணத்தால் (Your limbs often go numb) கை, கால்கள் மரத்துப் போகும். உடலின் ஒரு உறுப்பு அல்லது ஏதேனும் ஒரு பகுதி நீண்டநேரமாக அழுத்தப்படுக் கொண்டு இருந்தால் அப்பகுதியிலுள்ள நரம்புகள் செயற்பாட்டை இழந்து விடுகின்றன.அப்பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உணர்ச்சி எதுவும் இருக்காது. மரத்துப் போவதை உணர்கின்றோம்.
கை, கால் மரத்துப்போகும் பிரச்சனை உடையவர்கள் காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். விற்றமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் மீன், கறி போன்ற அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.
கை, கால்கள் மரத்துப் போக (Your limbs often go numb) என்ன காரணம்
- மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்றவற்றில் ஏதாவது பாதிப்பு இருத்தல்.
இதனால் உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போவதை உணரலாம்
- அதி தீவிர நீரிழிவுநோய்
இதனால் உடலின் இரு பக்கமும் மரத்துப்போவதை காணரலாம்.
- மரபணுக் கோளாறு
இதன் காரணமாக பல வருடங்களாக மரத்துப் போதல் பிரச்சனை இருக்கும்.
- தைராய்டு ஹார்மோன் குறைபாடு
- ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சர் மாத்திரைகளாலும் கை, கால்கள் மரத்துப் போகும்.
- அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், வைட்டமின் பி12 குறைபாடு காரணமாகவும் மரத்துப்போதல் உண்டாகலாம்.
கைகால்கள் மரத்துப் போவதை எப்படி தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம்
கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் அடிக்கடி மரத்துப்போய் அவதிப்படுகிறவர்கள் ஒரே இடத்தில், ஒரே மாதிரியான நிலையில் பல மணிநேரம் வேலை செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
உடல் உறுப்புகள் மரத்துப்போவதென்பது நோய் கிடையாது.பலவித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்
உதாரணமாக நீரிழிவு, தைராய்டு, விற்றமின் குறைபாடு போன்றவை.
ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் , உணவுகள் ,சரியான சிகிச்சைகள்மூலம் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள்,அதிகளவு இரசாயனங்களைக் கையாள்பவர்களுக்கும் ,கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கும் , மணிக்கட்டுக்கு அதிக வேலை கொடுக்கும் விதமாக தொழில் செய்பவர்களுக்கும் ,அதிக எடை கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும் வாய்ப்புகள் அதிகம்.
ஆனால், எதிர்பாராத நேரத்தில் திடீரென உடலின் ஒரு பக்கம் மரத்துப்போவது பக்கவாதத்தின் அறிகுறி. அவர்கள் உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.